ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் என்ன? பத்திரிக்கையாளர் கேள்விக்கு நச் பதில் சொன்ன பாலச்சந்தர்…

Published on: January 12, 2024
---Advertisement---

Kbalachander: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்திய பெருமை பாலச்சந்தர் தான். அவருக்கு இருவரின் வளர்ச்சியில் பெரிய பங்கு இருக்கிறது. அப்படிப்பட்டவரிடம் பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்க அதுக்கு அவர் செய்தது தான் ஹைலைட்டே.

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல். வளர்ந்து சில படங்களில் நடித்தாலும் அவர் நடிப்புக்கு சரியான தீனி கிடைக்கவே இல்லை. அதே நேரத்தில் நடிப்பின் மீது இருந்த காதலால் திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு கோலிவுட் பக்கம் வந்தவர் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: அயலான் படத்தினை விஜயகாந்த் ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாதாம்!… என்ன நடந்துச்சு தெரியுமா?

1973ம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த அரங்கேற்றம் படத்தின் தியாகு கேரக்டர் தான் அவர் கேரியரையே மாற்றியது. அதே மாதிரி ரஜினிக்கு, அபூர்வ ராகங்கள் வாய்ப்பை கொடுத்து திரை வாழ்க்கையை தொடக்கி வைத்தார். தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை ரஜினிக்கும் கொடுத்தவர்.

இதனாலே ரஜினியும், கமலும் தன்னுடைய திரை வாழ்க்கையில் பல முடிவுகளை பாலச்சந்தரிடம் கேட்டே எடுத்தார்களாம். அவரும் வளர்ந்த அந்த ஹீரோக்களுக்கு தன்னால் முடிந்த புகழை மட்டுமே தேடிக்கொடுத்தார். ஒரு பேட்டியில் பாலச்சந்தரிடம், பத்திரிக்கையாளர் கமல் மற்றும் ரஜினியிடம் நிறைய பிடித்திருக்கும். ஆனால் இருவரிடமும் பிடிக்காத விஷயம் என்று ஒன்று இருக்கும் தானே.

அது என்னவென்று கேட்டாராம். இதுக்கு பதில் சொல்ல முதலில் திணறினாராம் பாலசந்தர். பின்னர் பொறுமையாக தொடங்கியவர், என்னுடைய நூற்றுக்கு நூறு படத்தில் ஒரு காட்சி இருக்கும். ஜெய்சங்கருக்கு பெண் சபலம் என எல்லாரும் கூறுவார்கள். அவர் காதலிக்கும் லட்சுமி கூட அதை நம்புவார். அவரை அழைத்த நாகேஷ் ஒரு வெள்ளை தாளை கொடுத்து அதில் கருப்பு புள்ளியை வைப்பார்.

இதையும் படிங்க: ‘பொன்னியின் செல்வன்’படத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா? தவறை சுட்டிக் காட்டிய பொன்வண்ணன்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.