latest news
கோட்டும், வேட்டையனும் இல்ல… இந்த வருச உண்மையான சூப்பர்ஹிட் இதுதான்!.. பிரபலத்தின் பக்கா ரிப்போர்ட்..
Goat vs vettaiyan: தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சூப்பர் வசூல் படைத்ததாக சொல்லப்படும் கோட்டோ இல்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையனும் உண்மையான சூப்பர்ஹிட் படங்கள் இல்லை. இந்த படங்கள் மட்டுமே உண்மையான வெற்றி என பிரபல திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து இருக்கிறார்.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதையை வைத்து ஹிட் படங்கள் என்ற லிஸ்ட் வரும். ஆனால் இப்போதெல்லாம் கோலிவுட்டில் சில வருடங்களாகவே ரசிகர்கள் கூட வசூலில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். முதல் நாள் வசூல், ப்ரீ புக்கிங் என எல்லாமே தற்போது ரசிகர்களுக்கு பேசுபொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!…
அந்த வகையில் கடந்தாண்டு 3500 கோடிக்கு கோலிவுட்டில் வியாபாரம் நடந்தது. அதனால் இந்த ஆண்டு பெரிய அளவில் இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே பெரிய ஸ்டார்களின் படங்கள் இல்லை. சின்ன பட்ஜெட் படங்கள் கூட அளவில் பெரிய சோபிக்கவில்லை.
இரண்டாம் பாதியில் இருந்து கணிசமான படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கடந்த செப்டம்பர் மாதம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் விஜய் தான் இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படத்தினை கொடுத்த நடிகராக அறியப்பட்டார்.
அதை தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் வேட்டையன் நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அளவு திருப்திகரமாக இல்லை. இதனால் படமும் வசூலில் கோட்டை விட்டது. ஆனாலும் ரஜினியின் அக்மார்க் வசூலை பெற்று ஹிட் படமாகவே அமைந்தது.
இதையும் படிங்க: Kanguva: அடக்கொடுமையே… அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!…
இதனால் விஜய், ரஜினி தான் இந்த ஆண்டு கோலிவுட்டை காப்பாற்றியதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில் 20 கோடிக்கும் கம்மியாக முதலீடு போட்டு 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த கருடன், லப்பர் பந்து, வாழை, மகாராஜா படங்கள் மட்டுமே இந்தாண்டு உண்மையான வெற்றி படங்கள்.
300 கோடிக்கும் அதிகமாக முதலீடு போட்டு 400 கோடிக்கும் வசூல் என போஸ்டர் விட்ட விஜயின் கோட்டும், ரஜினிகாந்தின் வேட்டையனும் உண்மையான வெற்றி படங்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.