விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுவா?!.. அப்செட்டில் இருந்த ஏகே ரசிகர்களுக்கு இது செம அப்டேட்தான்!..
Vidaamuyarchi: துணிவு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜித் அடுத்து 10 மாதங்கள் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு உலகை சுற்றப்போனார். இடையில் அவரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், அப்படம் டேக் ஆப் ஆகவில்லை. விக்னேஷ் சிவனும் தூக்கப்பட்டார்.
அதன்பின் தடம், கலக தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குனர் என அறிவிக்கப்பட்டார். அதன்பின்னரும் 4 மாதங்கள் படப்பிடிப்பு துவங்கவில்லை. சொந்த கதை, ஹாலிவுட்டிலிருந்து சுட்ட கதை என பல கதைகளை அலசி ஆராய்ந்து ஹாலிவுட் பக்கமே போவோம் என ஒருவழியாக ஒரு கதையை முடிவு செய்து படப்பிடிப்பை துவங்கினார்கள்.
இதையும் படிங்க: அயலானை பிரிஞ்சி இருக்க முடியல போல! பிறந்த நாள் ட்ரீட்டாக சிவகார்த்திகேயன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்
லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் துவங்கப்பட்டது. இப்படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகின்றனர். ஜாலியாக மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லும்போது அங்கு அஜித் சந்திக்கும் பிரச்சனைதான் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆக்ஷனுக்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜூன் எனவும் செய்திகள் கசிந்தது. அஜர் பைசானின் குளிர் பனி அதிகம். அதேபோல், திடீரென மணல் புயல் உருவாகி விடுமாம். அதோடு, ஒரு நாளைக்கு அங்கு படப்பிடிப்பு நடத்த ரூ.50 லட்சம் வரை செலவாகி வருகிறதாம்.
இதையும் படிங்க: கமல் நெப்போலியன் வேஷத்துல நடிச்சாரா? குழப்பிய மா.கா.பா!… ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கலாய் சம்பவம்
இவ்வளவு சிரமங்களுக்கு இடையில்தான் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைசானில் உருவாகி வருகிறது. ஆனால், இப்படம் தொடர்பான எந்த அப்டேட்டையும் படக்குழுவோ, தயாரிப்பு நிறுவனமோ வெளியிடுவதில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பொங்கலுக்கு எதாவது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்றும் வரவில்லை.
இந்நிலையில், விடாமுயற்சி படம் வருகிற ஏப்ரல் 26ம் தேதி வெளியாகும் என செய்திகள் கசிந்துள்ளது. எந்த அப்டேட்டும் இல்லாமல் தவித்து வந்த அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்துள்ளது. எனவே, டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இந்த தகவலை பகிர்ந்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டைட்டில் வின்னர் இல்லாம நடந்த சக்சஸ் பார்ட்டி! அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?