GoodBadUgly: நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அதுகுறித்த முக்கிய காரணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த வருடம் அவரது பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரிய குழப்பத்தை தாண்டி படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் தள்ளிப்போய் கடந்த வருட கடைசி நாள் படப்பிடிப்பு தொடங்கியது. இருந்தும் அஜர்பைஜானில் நடந்த படப்பிடிப்பு தயாரிப்பு குழுவுக்கு பெரிய செலவு வைத்து விட்டதாகவே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இனிமே மரண அடிதான்.. சூர்யா ரேஞ்சுக்கு மாறிய சூரி!.. கருடன் டிரெய்லர் சொல்வது என்ன?..
இதை தொடர்ந்து விசா பிரச்சினை, அஜர்பைஜானியின் காலநிலை என பல பிரச்சனைகள் உருவெடுத்தது. இதனால் படக்குழு பலமுறை சென்று திரும்பியது லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பை தற்போது நடத்த முடியாமல் தயாரிப்புக் குழு முடக்கி வைத்திருக்கிறது. இனிமேல் விடாமுயற்சியை நம்பி பயனில்லை என நினைத்த அஜித் உடனே தன்னுடைய அடுத்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.
மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதில் அஜித் கேங்ஸ்டர் லுக்கில் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரின் நடிப்பில் வெளியான கடைசி சில படங்கள் எல்லாமே எலைட் லுக்கில் தான் இருந்தது. இதைத் தொடர்ந்து பல வருடம் கழித்து கலகலப்பான அஜித்தை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கே இன்னும் தொடங்கல… பாலிவுட்டில் இருந்து சிம்புவுக்காக இறக்கப்பட்ட முன்னணி நடிகை…
இந்நிலையில் எந்த நல்ல நாளும் இல்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதற்கு பின்னால் ஒரு வைரல் காரணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. அங்கு படத்தின் செட்டை போட்ட 700 ஊழியர்கள் அஜித்திடம் செல்பி எடுத்துக் கொள்ள விரும்பினார்கள்.
அவர்கள் கோரிக்கையை அஜித்தால் மறுக்க முடியாமல் போக அவரும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் இருந்த அஜித்தின் படத்தின் லுக் கசிவதை படக்குழு விரும்பவில்லை. இதனாலே உடனே பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…