இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டரைக் கொண்டு வந்ததே இதற்குத் தானாம்… பிரபலம் தகவல்

Published on: June 29, 2024
SK
---Advertisement---

ரசிகர்கள் நீண்டகாலமாக ஆவலோடு எதிர்பார்த்து வந்த படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். கமல் மாறுபட்ட 2 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். வர்மக்கலை என்ற ஒரு பாயிண்டை வைத்து படத்தை அழகான திரைக்கதையுடன் நகர்த்தி இருந்தார் ஷங்கர்.

இதையும் படிங்க… கமலுக்கு கல்கி படத்துக்காக 150 கோடி கொடுத்தது முட்டாள்தனம்… பிரபலம் கதறல்!

இந்தப் படத்தின் அடிநாதமே லஞ்சத்தை ஒழிப்பது தான். அது இன்று வரை ஒழிந்தபாடில்லை. அதற்கு அரசியல்வாதிகளே பெரும் காரணம் என்பதற்காகவே இந்தியன் 2 படம் உருவானதாம். ஒரு நிகழ்ச்சியில் கமல் பேசும்போது இந்தியன் 2 உருவாகக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்லி இருந்தார்.

இந்தியன் 2 படத்துல இந்தியன் தாத்தா தான் லீடு ரோல். இந்தியன் படத்துல யங் கமலும் இருந்தார். இந்தியன் தாத்தாவும் இருந்தார். ஆனா இந்தியன் தாத்தா தான் டாமினேட் பண்ணிருப்பாரு. இத்தனைக்கும் அக்கடான்னு நாங்க உடை போட்டா, டெலிபோன் மணி போல், மாயா மச்சீந்திரா என எல்லா பாடல்களும் யங் கமலுக்குத் தான் வச்சிருப்பாங்க. ஆனா கடைசி வரைக்கும் நாம பேசறது இந்தியன் தாத்தாவைத் தான்.

அதே போல தான் இந்தியன் 2 படத்துல யங் கமலைக் கொண்டு வர முடியாது. இத்தனை வருஷம் கழிச்சி கொண்டு வந்தா அது நல்லாருக்காது.
96ல கமல் யங்கா நடிச்சாருன்னா அது ஓகே. இப்ப அப்படி நடிக்க முடியுமா? நடிச்சாலும் ஏத்துக்குவாங்களா? அதைக் கமலே விரும்ப மாட்டாரு. அதனால ஒரு யங் கேரக்டர் தேவைப்பட்டுது. அதுக்காகத் தான் சித்தார்த் கேரக்டர். அவர் மூலமாக கதை நிறைய போனாலும் இந்தியன் தாத்தா தான் ஹீரோ.
அவரு 40 சதவீதம் வந்தாலும் அவர் தான் லீடு கேரக்டர்.

இதையும் படிங்க… சண்டக்காரன் காலில் விழுவதே மேல்! ‘கோட்’ படத்தில் மறைமுகமாக வேலை பார்க்கும் ரெட் ஜெயண்ட்

கமல் சார் இன்னைக்கு பட புரொமோஷனுக்காக மலேசியா, சிங்கப்பூர், துபாய், பாம்பே, டெல்லி, ஹைதராபாத்னு போய்க்கிட்டே இருக்காரு. அதே மாதிரி நிறைய ஊடகங்களுக்குப் பேட்டியும் கொடுத்து வருகிறார். பிசினஸை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போறதுக்குத் தான் புரொமோஷன்.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.