Cinema News
சிவாஜி படத்திற்கு நோ சொல்ல காரணமே வேறு… சத்யராஜின் விளக்கம் சரிதானா?
Sathyaraj: நடிகர் சத்யராஜ் தனக்கு வந்த சிவாஜி படத்தின் வாய்ப்பை மறுப்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் வெளிப்படையாகவே மோதிக் கொள்வது வழக்கமாக தான் இருக்கிறது. அப்படி இருவர்கள்தான் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த். மிஸ்டர் பாரத் படத்தில் அப்பா மற்றும் மகனாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றனர்.
இதையும் படிங்க: அன்னைக்கு அபர்னதி இன்னைக்கி பிரியா பவானி சங்கரா..? நயன்தாரா ரூட்டை கையில் எடுக்கும் நடிகைகள்!..
ஆனால் அப்படத்தை தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. பொதுவாக தமிழ்நாடு மீது அதிக பற்று உடையவர் சத்யராஜ். அது போல கர்நாடகாவில் இருந்து நடிக்க வந்த ரஜினிகாந்த் தன்னுடைய மாநிலத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக பலருக்கும் எண்ணம் இருக்கிறது.
இதனால் பல மேடைகளில் ரஜினியை நேராகவே சத்யராஜ் சாடி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் எதிரான அரசியல் கொள்கையால் தான் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என கிசுகிசுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான சிவாஜி தி பாஸ் திரைப்படத்தில் வில்லனாக முதலில் சத்யராயிடம் தான் படக்குழு கோரிக்கை வைத்திருக்கிறது.
ஆனால் அவர் தன்னால் நடிக்க முடியாது என கூறிய பின்னரே பிரபல நடிகர் சுமன் அந்த கேரக்டரில் நடித்திருப்பார். ரஜினி மீது இது இருந்த கோபத்தினால் தான் சத்யராஜ் நடிக்கவில்லை என பலரும் பேசி வந்தனர். ஆனால் 38 வருடங்களுக்கு பின்னர் தற்போது கூலி திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அவர் பண்ணுறதுக்கு என்னை அடிச்சா எப்படி? திடீரென அர்ச்சனா பதிவிட்டு ட்வீட்…
அதற்கு பதில் அளித்த சத்யராஜ் எனக்கு நிறைய படங்கள் எல்லாம் வாய்ப்புகள் வரவில்லை. சிவாஜி படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய மார்க்கெட் பெரிய அளவில் சரிந்து இருந்தது. அதனால் தொடர்ச்சியாக 10 படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தேன்.
அந்த நேரத்தில் நான் வில்லனாக நடித்து மீண்டும் என்னை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காகவே அந்த வாய்ப்பை மறுத்தேன். தற்போது நிறைய குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதால் இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டேன்.
அதற்குள் நான் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும், அதனால்தான் அந்த படத்தை மறுத்ததாகவும் என பல வதந்திகள் பரவியதாக தெரிவித்திருக்கிறார். ஒரே பட வாய்ப்பு தான் வந்தது அதை மறுத்ததற்கும் இதான் காரணம் என சத்யராஜ் தடாலடியாக பதில் தெரிவித்திருக்கிறார்.