விஜயை நெகட்டிவாக காட்ட தான் இந்த காட்சி இருந்தது… சர்ச்சைக்கு பதில் சொல்லிய லியோ ஒளிப்பதிவாளர்..

0
207

Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தில் எக்கசக்கமான சர்ச்சைகள் கொடி கட்டி பறந்தது. அதில் ஒரு சர்ச்சைக்கு அந்த படத்தி ஒளிப்பதிவாளர் ஓபனாக பதில் சொல்லிவிட்டார். அவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. இப்படத்தில் விஜய், த்ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மனோஜ் ஒளிப்பதிவு செய்து இருந்தர். படத்தின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக சர்ச்சை எழுந்து கொண்டே இருந்தது.

இதையும் படிங்க: த்ரிஷாவுக்கு முத்தமெல்லாம் கொடுக்க முடியாது… மறுத்த முன்னணி நடிகர்..! ஆனா படம் சூப்பர்ஹிட்..!

அதிலும் நா ரெடி பாடல் ரிலீஸில் விஜய் சிகரெட் பிடித்தப்படி இருப்பார். இதற்கு பல சங்கங்கள் ஓபனாக கண்டனம் தெரிவித்தது. ஆனால் அந்த காட்சியை வைத்ததற்கு ஒரு பெரிய காரணம் இருப்பதாக மனோஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில், பார்த்திபனை விட லியோ ரொம்பவே நெகட்டிவான கேரக்டர் என்பதை காட்ட எங்களுக்கு ரொம்பவே கம்மியான நேரம் தான் இருந்தது. அதற்கு தான் சிகரெட் பிடிக்கும் காட்சியை சேர்த்து இருந்தோம். 

அதைப்போல அந்த பாடலில் மன்சூர் அலிகானிடம் இருந்து க்ளாஸில் இருக்கும் சரக்கையும் வாங்கி குடிப்பார். இது அவர் கதாபாத்திரத்தின் நெகட்டிவை அதிகரிக்கவே செய்தோம். அதைப்போல பார்த்திபன் கதாபாத்திரம் பட ஆரம்பத்தில் இதையெல்லாம் எப்படி குடிக்கிறீங்க என கௌதமிடம் கேட்டு இருப்பார்.

இதையும் படிங்க: ஏமாத்திய எல்லா ஹீரோக்களும் பல்ப்பா..? தமிழ் சினிமாவில் இந்த இடத்திற்கு வெற்றிடம்.. ப்ளூசட்டை மாறன் சாட்டையடி..!

இந்த விஷயத்தினை பிரச்னையாக பேசிய அவர்கள் யாருமே முதல் காட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அது ஏன் என்பது தான் புரியவில்லை. இந்த சிகரெட் காட்சியை ரிகர்சல் பண்ணும்போது டூப் நடிகருக்கே வரவில்லை. ஆனால் விஜய் வந்து டைமிங் கேட்டு கொண்டார். 

அதை ஒரே டேக்கில் நடித்து கொடுத்து விட்டார். தற்போது கோலிவுட்டில் இருக்கும் எந்த நடிகர்களாலும் விஜய் நடிப்பது போல நடிக்கவே முடியாது. அவர் தான் பர்ஸ்ட் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

google news