விஜயகாந்த் ஏஐ பயன்படுத்திய அரசியல் காரணமா? கேள்விக்கு நச்சு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

Vijayakanth: விஜயகாந்தின் இறப்புக்கு பின்னர் தான் அவரின் புகழை பயன்படுத்திக்கொள்ள கோட் திரைப்படத்தில் அவரின் காட்சிகள் இணைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்த உண்மை சம்பவத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது வெளியிட்டிருக்கிறார்.

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். படத்தின் மூன்று சிங்கிளும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதற்கு படக்குழு அலட்டிக் கொள்ளாமலே இருந்தது.

இதையும் படிங்க: வாண்டட் ஆக வலையில் சிக்கிய வெங்கட் பிரபு… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

ஆனால் தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. அந்த ஆசைக்கு தீனி போடுவது போல சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விஜயின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படத்தில், நடிகை திரிஷா, சிவகார்த்திகேயன், சிஎஸ்கே வீரர்கள் உட்பட பல சிறப்பு கேமியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும் ரசிகர்கள் மறைந்த முன்னாள் நடிகர் கேப்டன் விஜயகாந்தின் ஏஐ கேமியோவுக்கு தான் மிகப்பெரிய அளவில் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும் இந்த கேமியோ விவகாரம் அவர் இறந்ததற்கு பின்னர் தான் உருவாக்கப்பட்டது.

#image_title

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தின் கூட்டத்தை பார்த்த விஜய் இதை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்தது. அச்சமயம் இருந்த விஜயகாந்தை படத்திற்கு பயன்படுத்துவது படத்தின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் எனவும் படக்குழு திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஷயத்தை உடைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கூலி படத்தில் பெத்த கோடியில் புக் செய்யப்பட்டாரா நாகர்ஜூனா… வெவரம்தான்!..

ஆனால் திடீரென கேப்டன் விஜயகாந்த் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரின் ஏஐ பயன்படுத்த இருந்த விஷயம் வெளியில் கசிந்தது. இது விஜய் சாரின் அரசியல் நாடகம் எனக் கூறப்படுவது எல்லாம் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles
Next Story
Share it