பாய்ஸ் படத்தில் ஹீரோவாக இருந்த பிரபல இசையமைப்பாளர்…! அந்த காரணத்தால் மிஸ்ஸான வாய்ப்பு!...

by Akhilan |
பாய்ஸ் படத்தில் ஹீரோவாக இருந்த பிரபல இசையமைப்பாளர்…! அந்த காரணத்தால் மிஸ்ஸான வாய்ப்பு!...
X

Boys: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் பாய்ஸ். இப்படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடிக்க இருந்த இசையமைப்பாளர் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் பாய்ஸ். இப்படத்தில் சித்தார்த், பரத், தமன், மணிகண்டன், பரத் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு செய்து இருந்தார். படம் பெரிய அளவில் ஹிட்டானது. ரோபோ படத்தினை இயக்க இருந்த ஷங்கர், புதுமுக நடிகர்களை வைத்து பாய்ஸ் படத்தினை இயக்க முடிவெடுத்தார்.

இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி இது தெரியும்?!. அஜித்துக்கு வாலி எழுதிய வரிகள்!. வாயடைத்து போன இயக்குனர்…

இதில் ஐந்து நடிகர்களையுமே புதுமுகமாக ஒப்பந்தம் செய்ய ஆட்கள் தேர்வில் இறங்கினார். அதில் அவர் மனதில் முதல் ஆளாக இருந்தது நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை தானாம். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயில் பாடலில் தோன்றி இருந்தார் ஜிவி பிரகாஷ்.

அதனால் அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் ஷங்கர் இருந்தாராம். ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பையன் என்பதால் படத்திற்கு அது புரோமோஷனாகவும் அமையும் என யோசித்து இருந்தார். ஆனால் அப்போது அவர் பள்ளியில் படித்து கொண்டு இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க: முதல்வராகி முதன் முதலாக சொந்த ஊருக்கு போன எம்.ஜி.ஆர்!.. மனம் கலங்கி நின்ற நெகிழ்ச்சி தருணம்!..

இதையடுத்து, பல வருடங்கள் கழித்து வசந்தபாலன் இயக்கத்தில் உருவான வெயில் படத்தினை ஷங்கர் தயாரித்து இருந்தார். அப்படத்தின் மூலம் ஜீவி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததோடு தேசிய விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story