Biggboss Tamil: இந்த வாரம் ‘வெளில’ போகப்போறது யாரு? ..

Published on: November 14, 2024
biggboss
---Advertisement---

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது வெற்றிகரமாக 40 நாட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சுனிதாவை வெளியே அனுப்பிய பிக்பாஸ், இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை எண்டெர்டெயின் செய்து வருகிறார்.

இந்த வாரம் சாச்சனா, வர்ஷினி, ரியா, ரானவ், ரஞ்சித், ஜாக்குலின், சத்யா, சிவகுமார், தீபக், மஞ்சரி, ஜெப்ரி, சவுந்தர்யா, தர்ஷிகா என மொத்தம் 13 பேர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் சிங்கிள் எவிக்ஷனா இல்லை டபுள் எவிக்ஷனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: Karthi: பாகுபலி காலகேயனே தோத்துருவார் போல.. ‘கங்குவா’ படத்தில் கார்த்தியின் கெட்டப் இதோ

இந்தநிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றை வைத்து பார்க்கும்போது ரஞ்சித் அல்லது ரியா வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

#image_title

வெளியில் இருந்தபோது அளித்த பேட்டிகளால் ரஞ்சித்திற்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் உள்ளே சென்று அவர் பெரிதாக பெர்பார்ம் செய்யவில்லை. எனவே அவரை வெளியில் அனுப்பி திரும்ப வீட்டுக்குள் அழைத்து கொள்ளலாம் என பிக்பாஸ் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை ரஞ்சித் மிஸ் ஆனால் ரியாதான் அந்த நபர் என விஷயம் அறிந்தவர்கள் அடித்து கூறுகின்றனர்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பேசாம ரெண்டு பேரையும் வெளியில அனுப்புங்க பிக்பாஸ் என்று, அன்பாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Kanguva: கொஞ்சமா பண்ணீங்க!. ஓவர் கான்பிடன்ஸ் வச்ச ஆப்பு!. ஞானவேல் ராஜாவை பழிதீர்த்த எஸ்.கே!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.