சிங்கிளா களமிறங்கும் சித்தார்த்.. இந்த வார ஓடிடி ரிலீஸ்… எதில் தெரியுமா?

Siddharth: சமீபகாலமாக கோலிவுட்டின் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் ஹிட் அடித்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் மற்ற பிரபல படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு.

சித்தார்த் தயாரித்து நடித்த திரைப்படம் சித்தா. இப்படத்தினை அருண்குமார் என்பவர் இயக்கினார். நிமிஷா நாயர், அஞ்சலி நாயர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்னையை இந்த படம் பேசி இருந்தது.

இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..

திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து படத்துக்கான பாடல்களை இசையமைத்து இருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளினாலும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.

இப்படம் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. அதிலும் பெரிய ஸ்டார் மற்றும் பிரபல படங்கள் இந்த வாரம் ரிலீஸாகவில்லை. இதனால் பலரின் ஒரே சாய்ஸாக சித்தா தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐஎம்டிபி தளத்தில் இப்படம் 8.5 ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அசோகன் கடனாளியா மாறியதற்கு எம்ஜிஆர்தான் காரணமா? இப்படியெல்லாம் நடந்திருக்கா?

மேலும், தமிழில் ஆஹா தளத்தில் ஜோதி என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதை தவிர மற்ற தமிழ் படங்கள் எதுவுமே ரிலீஸாகவில்லை. சிவராஜ்குமார் நடிப்பில் ஆயுதபூஜைக்கு ரிலீஸான கோஸ்ட் திரைப்படம் ஜீ5 தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. இதை தவிர்த்த எந்த ஒரு படமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story