சினிமாவில் நுழைந்தது இப்படித்தான்!. பல ரகசியங்களையும் பகிர்ந்து கொண்ட தியாகராஜன்...

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என கலக்கியவர்தான் தியாகராஜன். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். துவக்கத்தில் வில்லனாகவே நடித்து வந்த தியாகராஜன் மலையூர் மம்முட்டியான் படம் மூலம் ஹீரோவாக மாறினார். ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.

ஆரம்பத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரையும் விடாமல் நேரில் சென்று சந்தித்து வந்தாகவும் மனம் திறந்த அவர், 'ஜூலி' என்ற ஹிந்தி படத்தின் மூலமாகவே தனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது, அதிர்ஷ்டவசமாக அந்த படம் மிகப்பெரிய வெற்றியடையவே தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத்துவங்கியதையும் நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க: இளையராஜாவை முதன் முதலா பிளைட்ல அழைச்சிட்டு போனதே நான்தான்!.. யாருப்பா அவரு?..

பட வினியோகிஸ்தராக இருந்து வந்தபோது தனக்கு வந்த ஆசையான "தயாரிப்பாளர்" என்பதை இளையராஜாவிடம் கூறியதாக குறிப்பிட்ட அவர் அதன் பிறகே பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாக பணியை துவங்கியதாகவும், பின்னர் இளையராஜா அந்த படத்தை தனது சகோதரருக்கு விட்டுத்தருமாறு கேட்டதாகவும் பின்னர் "பாவலர் கிரியேஸன்ஸ்"படத்தை தயாரித்ததன் பின்னனியில் இருந்த உண்மையையும் தெளிவு படுத்தினார்.

ரஜினி வளர்ந்து வந்த காலத்தில் துவக்கத்தில் வில்லனாக நடித்துவர, அவர் கன்னட மொழியில் வில்லனாக நடித்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அழைத்து சென்றதாக கூறியதோடு. இன்று உலகமெங்கும் ரசிகர்களை கவர்ந்த இளையராஜாவை இலங்ககைக்கு முதன் முதலாக விமானத்தில் அழைத்து சென்ற தனது பழைய ஞாபகத்தை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: வாலி எழுத வேண்டிய பாடலை எழுதிய கண்ணதாசன்!. போட்டியாளரை வாழவைத்த கவிஞரின் நட்பு!..

மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த பிறகு, ஜவுளி விற்பனையிலும் வாய்ப்பு வந்ததாகவும் கூறிய தியாகராஜன் இறுதியில் "திரைத்துறை" தன்னை இழுத்துக்கொண்டதையும், அதன் மீது தனக்கிருந்த ஆர்வமுமே சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள காரணமானதாகவும் குறிப்பிட்டார்.

இளையராஜாவிற்காக "அலைகள் ஓய்வதில்லை" படத்தை விட்டுக்கொடுத்த போதிலும் பாரதிராஜா சொன்னதை தட்ட முடியாமல் அப்படத்தின் கதாநாயகி ராதாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்ததாகவும், அதன் பின்னர் வாய்ப்புகள் வந்து குவியத்துவங்கியது.

துவக்கத்தில் அவரது மனைவி சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தையும், பிரபலத்தின் மனைவியாக வெளி உலகத்திற்கு செல்லும் பொழுது அது தன்னுடய சுதந்திரத்தை பறிக்கும் செயலாக இது அமைந்துவிடும் என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தனது முடிவினை மாற்றவேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டதையும், ஆனால் தான் சினிமாவில் தான் பயணிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது நடந்ததாக கூறினார்.

 

Related Articles

Next Story