Cinema News
விஜயை அரசியலில் தள்ளிய அந்த 2 சம்பவங்கள்… இப்போது காய் நகர்த்துவது சரிதானா..?
நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். அதனால் கட்சித்தலைவராக ஒரு பக்கம், சினிமா நடிகராக ஒருபக்கம் இருந்து வருகிறார். விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளார். அதன் பின்னணி என்னவாக இருக்கும்? பார்க்கலாமா…
நடிகர் விஜய் நடித்த ‘காவலன்’ படம் வெளியாகும்போது பலத்த சர்ச்சைகள் எழுந்தன. அந்தப் படம் வரும்போது சன்டிவியில் வாங்கி வைத்துக் கொண்டு படத்தை வெளியிடாமல் இருந்தார்களாம். அதே போல ஒரு பிரச்சனை ‘தலைவா’ படத்திற்கும் வந்தது.
அப்போது விஜய்க்கு ஒரு அழுத்தம் வந்தது. ‘இந்த அதிகாரத்தை வைத்துத் தானே என்னை அழுத்தறீங்க… இந்த அதிகாரத்தையே நாளைக்கு நான் வாங்கிட்டேன்னா… அது என் கைக்கு வந்துட்டுன்னா…’ அப்படிங்கற கோபம் வரும் அல்லவா…? இன்னும் சொல்லப்போனால் அரசியலில் இவரைத் தள்ளுனதே அந்த 2 சம்பவங்கள் தான் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
சீமானுடன் விஜய் கூட்டணி அமைப்பாரா என்ற கேள்விக்கு அந்தனன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானும் இதுவரை விஜயை விட்டுக்கொடுக்காமல் தான் பேசி வருகிறார். அந்தவகையில், யாரும் யாருடனும் கூட்டு சேரலாம் என்று இருக்கும்போது ஏன் அவர்கள் சேரக்கூடாது. இதுல யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அவர்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… மோகன், பூர்ணிமா காதலுக்கு பாக்கியராஜ் இடைஞ்சலாக இருந்தாரா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?
தற்போது விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலும் அரசியலில் களம் காண்பதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார். முதல் வேலையாக பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களைக் கவுரவிக்க இருக்கிறாராம். அடுத்தடுத்து அவர் கட்சி சார்பாக என்ன பேசுகிறார் என்பதைப் பொறுத்துத் தான் அவருடைய அரசியல் வெற்றியும் தீர்மானிக்கப்படும்.