Connect with us
Sivaji ganesan

Cinema History

ரசிகர்களைக் கதறி அழவைத்த சிவாஜியின் அந்த ஏழு படங்கள்!.. மறக்க முடியாத பாசமலர்!..

நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது ஆத்மார்த்தமான நடிப்பு தான். அந்த நடிப்பில் எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சைக் கொண்டவர்களையும் கரைய வைக்கும் அளவு நடித்த சோகமயமான படங்களும் உள்ளன. அவற்றில் அசத்திய 7 படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பச்சை விளக்கு

1964ல் பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பச்சை விளக்கு. சிவாஜி, விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் உள்பட பலர் நடித்துள்ளனர். தங்கையை மருத்துவராக்க பாடுபடும் அண்ணன் கதை. பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதை.

தங்கையாக விஜயகுமாரியும், அண்ணனாக சிவாஜியும் அற்புதமாக நடித்து இருப்பார்கள். படத்தின் ஒரு ரயில் விபத்தைத் தடுக்க தன் உயிரையே விடும் காட்சியில் மனதையே கரைத்து விடுவார் சிவாஜி.

அவன் தான் மனிதன்

இதையும் படிங்க… சைனிங் உடம்பு சூடு ஏத்துது!.. அரை ஜாக்கெட்டில் அழகை காட்டும் ரம்யா பாண்டியன்!..

1974ல் வெளியான அவன் தான் மனிதன் நட்பின் சிறந்த வெளிப்பாடு. சிவாஜியின் 175வது படம். மஞ்சுளா, ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் முடிவில் கதாநாயகன் இறந்து விடுவது கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும். ஆட்டுவித்தால், மனிதன் நினைப்பதுண்டு பாடல்கள் அற்புதம்.

ராஜபார்ட் ரங்கத்துரை

நாடக நடிகரான சிவாஜியை உறவுகள் ஏமாற்றும் கதை. பி.மாதவன் இயக்கத்தில் 1973ல் வெளிவந்த படம். நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, சுருளிராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கொடிகாத்த குமரன் நாடகம் நடக்கும்போது கொடியவர்களால் அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தக் காட்சியை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அம்மம்மா தம்பி என்று நம்பி என்ற பாடல் கண்கலங்க வைத்து விடும்.

பாபு

1971ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய படம் பாபு. சிவாஜி, சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் சிவாஜியின் நடிப்பு அட்டகாசம். இளமை முதல் கடைசியில் முதுமை வரை சிவாஜியின் நடிப்பு அருமையாக இருக்கும். இதோ எந்தன் தெய்வம் பாடல் சிவாஜி, குட்டி ஸ்ரீதேவியின் நடிப்பு அருமை. படத்தில் பல காட்சிகளில் சிவாஜியின் நடிப்பு நம்மைக் கண்கலங்க வைத்து விடும்.

தெய்வமகன்

Theiyva magan

Theiyva magan

1969ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியானது. ஆஸ்கர் விழாவில் சிறந்த வெளிநாட்டுப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட படம். முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட 3 வேடங்களில் நடித்து அசத்தினார். பணக்காரன், தம்பி, கண்ணன் என 3 வேடங்களில் கண்ணன் வேடம் தான் அசத்தி விடும். நம் உள்ளங்களைக் கனக்க வைத்தவரும் அவர் தான். குடும்பத்திற்காக தன் உயிரையேத் துறப்பது கண்களைக் குளமாக்கி விடும்.

கர்ணன்

1964ல் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, முத்துராமன், என்டி.ராமராவ், சாவித்திரி, தேவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். மகாபாரத போர்க்களத்தை மையமாக வைத்து உருவான படம். கர்ணனாக நடித்து அசத்தியிருந்தார் சிவாஜி. கிளைமாக்ஸ் காட்சியில் என்.டி.ராமராவ் கர்ணனின் உயிரை வாங்கிச் செல்வது நெஞ்சைப் பிழிந்து எடுக்கும் சோகத்தை வரவழைக்கிறது. அப்போது வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் இப்போதும் நம்மைக் கலங்கடிக்கும்.

பாசமலர்

இதையும் படிங்க… விரைவில் படம் ரிலீஸ்!.. வீட்டில் நடந்த துக்கம்!.. ரஜினி பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!..

1961ல் வெளியான அண்ணன், தங்கை பாசப்பிணைப்புள்ள படம். பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த செம மாஸான படம். சிவாஜி, சாவித்திரி நடிப்பு அற்புதம். ஜெமினிகணேசனும் படத்தில் நடித்து அசத்தியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்று வரை எடுத்துக்காட்டாக உள்ள படம் இதுதான்.

கடைசி காட்சியில் கைவீசம்மா கைவீசு பாடலுக்கு ஒட்டுமொத்த திரையரங்கமும் அழுதது. அதிலும் மலர்ந்தும் மலராத பாடலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. அவ்வளவு சிறப்பான பாடல்.

google news
Continue Reading

More in Cinema History

To Top