Cinema News
கடந்த 3 வருடங்களாக தியேட்டர்களை வாழ வைத்த 3 நடிகர்கள்.. 3 படங்கள்!…
சினிமாவை பொறுத்தவரை 60,70களில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வசூல் மன்னர்களாக இருந்தனர். இவர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் போதும் என தயாரிப்பாளர்கள் நினைத்தாலும். அதிலும், எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தால் அந்த தயாரிப்பாளருக்கு ஜாக்பாட்தான்.
திரையுலகில் 30 வருடங்களும் மேல் எம்.ஜி.ஆர் வசூல் சக்கரவர்த்தியாக இருந்தார். அடிமைப்பெண் திரைப்படத்தின் வசூலை இன்றைய மதிப்போடு ஒப்பிட்டால் ரூ.350 கோடி என சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின் ரஜினி – கமல் வந்தனர். ரஜினியின் படங்களும் எம்.ஜி.ஆர் படங்களை போல வசூலை வாரிக்குவித்தது. அதனால்தான் அவரை தயாரிப்பாளர்கள் சூப்பர்ஸ்டார் என அழைத்தனர்.
இதையும் படிங்க: ஜெய்லரை தட்டித் தூக்க ரெடியாகும் தளபதி! இன்னும் 60 நாளில் ஹைப்பை ஏற்படுத்தப் போகும் லோகேஷ்
90களில் மோகன், விஜயகாந்த், ராமராஜன் ஆகியோரின் படங்களும் நல்ல வசூலை பெற்றது. சினிமாவின் பொற்காலம் என்றால் அது 50லிருந்து 2000 வரை சொல்லலாம். ஏனெனில், மக்களுக்கு சினிமாவை தவிர வேற எந்த பொழுதுபோக்கும் இல்லை. அதனால்தான் காலைக்காட்சி மற்றும் மேட்டனி காட்சிகள் கூட ஹவுஸ்புல் ஆனது. ஏனெனில் வீட்டில் பெண்கள் வேலையை முடித்துவிட்டு மதியம் மேட்டனி ஷோக்கே அதிகம் செல்வார்கள்.
ஆனால், படிப்படியாக திரையரங்களுக்கு மக்கள் செல்வது குறைந்துபோனது. அதற்கு காரணம் வீட்டிலேயே தொலைக்காட்சி இருக்கிறது. சீரியல்களில் பெண்களுக்கு நேரம் போய்விடுகிறது. ஒருபக்கம் தியேட்டர்களின் டிக்கெட் விலை தாறுமாறாக அதிகரித்துவிட்டது. இப்படி பல காரணங்கள் சொல்லலாம். இதனால் தமிழகத்தில் கடந்த 20 வருடங்களில் பல ஊர்களில் தியேட்டர்கள் இடிக்கப்பட்டு கல்யாண மண்டபமாகவும், வேறு சில நிறுவனங்களாகவும் மாறிவிட்டது.
இதையும் படிங்க: வசூலில் தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார்!.. கோடிகளை குவிக்கும் ஜெயிலர்.. 6 நாள் வசூல் இதுதான்!…
அதுவும் கொரோனா காலத்தில் பல மாதங்கள் தியேட்டர்கள் மூடியே கிடந்தது. அப்போதுதான் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களுக்கு உயிர் கொடுத்தது. கொரோனாவில் வீட்டில் முடங்கிய மக்கள் தியேட்டர்களுக்கு சென்று அப்படத்தை பார்த்து ரசித்தனர். கொரோனாவால் ஐசியூ வார்டில் இந்த சினிமா உலகத்துக்கு மாஸ்டர் படத்தின் வசூல் ஆக்சிஜனை கொடுத்தது.
அதன்பின் கமலின் விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடியையும் தாண்டி வசூல் செய்து பிளாக் ப்ஸ்டர் ஹிட் அடித்து தியேட்டர்கள் அதிபர்களை உற்சாகப்படுத்தியது. இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் விக்ரம் பட வசூலை தாண்டும் என சொல்கிறார்கள். ஜெயிலர் படத்தின் வசூலும் தியேட்டர் அதிபர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. மற்ற சில நடிகர்கள் மற்றும் படங்கள் இருந்தாலும் ரஜினி, கமல், விஜய் ஆகிய 3 பேரும் அசைக்க முடியாத வசூல் சக்ரவர்த்திகளாக இருப்பதை மறுக்க முடியாது.
இதையும் படிங்க: இமயமலையில் டிரக்கிங்!.. பாபா குகையில் தியானம்!.. தீயாக பரவும் ரஜினியின் புகைப்படங்கள்!…