செட்டு போடவே முக்கால்வாசி காசு செலவாகியிருக்கும் போல! -  சூர்யா 42 படத்துக்கு போட்ட 3 பெரிய செட்டுகள்!

by Rajkumar |
செட்டு போடவே முக்கால்வாசி காசு செலவாகியிருக்கும் போல! -  சூர்யா 42 படத்துக்கு போட்ட 3 பெரிய செட்டுகள்!
X

surya-42

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய் அஜித்தோடு போட்டி போட்டவர் நடிகர் சூர்யா. இப்போதும் தமிழ் சினிமாவில் சண்டை படங்கள் தவிர்த்து சில வித்தியாசமான கதைகளில் நடிக்கும் நடிகர்களில் சூர்யாவும் முக்கியமானவர்.

அவர் நடித்த 24, மாற்றான் போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இறுதியாக வந்த சூர்யா திரைப்படங்களில் ஜெய்பீம், சூரரை போற்று போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனையடுத்து தற்சமயம் சூர்யா தனது 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். வரலாற்றில் மன்னர் காலத்தில் நடப்பது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

surya 42

இந்த படத்தின் படப்பிடிப்பில் செட் போடுவதற்கு மட்டும் பல கோடி செலவாகியுள்ளது. ஏற்கனவே மன்னர் காலக்கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மன்னர் காலக்கட்டம் போலவே பெரும் செட் போடப்பட்டது. அதற்கு பிறகு வெளிநாட்டு சாலை அமைப்பை அப்படியே காபி செய்து ஒரு செட் போடப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு ஏரோப்ளேனின் உள் அமைப்பை செட் போட்டு அதில் படப்பிடிப்பை எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஏரோப்ளேனில் சண்டை காட்சிகள் இருக்கலாம் என்பது ரசிகர்களின் யூகமாக இருக்கிறது. இந்த நிலையில் சூர்யா 42 மக்கள் மத்தியில் வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

Next Story