தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் பாரதி கண்ணன். அருவா வேலு, கண்ணாத்தாள், திருநெல்வேலி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ பண்ணாரி அம்மன் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். பல திரைப்படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக வடிவேலு சூனா பானா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த காமெடி காட்சி ஒன்றில் பாரதிகண்ணனும் நடித்திருப்பார். அந்த காமெடி காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
காதலிக்கு மற்றவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொள்ளப்போவார் பாரதி கண்ணன். ஆனால் அங்கே வரும் வடிவேலு அதைப் பிடுங்கி குடித்து விடுவார். அந்த காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற்றது.
ஒருபக்கம் கடந்த சில மாதங்களாகவே பல ஊடங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார் பாரதி கண்ணன். அதில் நடிகர் கார்த்திக் பற்றி அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. கார்த்திக் பலரிடமும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடிக்க வர மாட்டார்.. தயாரிப்பாளர்களை படாத பாடு படுத்துவார்.. மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்வார்’ என்றெல்லாம் கார்த்திக்கை பற்றி பல ரகசியங்களை பாரதி கண்ணன் கூறி இருந்தார். இதையடுத்து நடிகர் திலகம் பிரபு, ராதாரவி ஆகியோர் அவர்கள் பாரதி கண்ண்ணனி தொடர்பு கொண்டு கார்த்திக்கை பற்றி இனிமேல் பேச வேண்டாம் என சொன்னதாகவும் ஊடகம் ஒன்றில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் அவர் பேட்டி கொடுத்தபோது ‘அந்த சூனா பானா மது தொடர்பான காமெடி காட்சி மூலம் நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு பதில் சொன்ன பாரதி கண்ணன் ‘நடிகர் விகே ராமசாமி வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன். அவருக்கு ஜூன் 10ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமணத்திற்கு 3 நாள் இருக்கும்போது நண்பர்களை சந்திக்க அவர்கள் மது அருந்து கூப்பிட்டார்கள்.. எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்ற அவர் சொல்ல ‘திருமணத்துக்கு இன்னும் 3 நாள் இருக்கிறதே’ என்று அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள்.
9ம் தேதி மதுரை சென்ற அவர் நண்பர்களுடன் மது அருந்தி மட்டையாகிவிட்டார். அடுத்த நாள் காலை 9.45 மணிக்குதான் எழுந்தார். 10 மணிக்கு கல்யாணம். அங்கிருந்து அவரின் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்ல மூன்று மணி நேரம் ஆகும். பதட்டத்தோடு எழுந்து ரெடியாகி காரில் வேகமாக சென்றார்கள். ஆனால் அங்கு அவர் சென்று சேரும்போது அந்த பெண்ணின் கழுத்தில் அவரின் தம்பி தாலி கட்டி திருமணமே முடிந்திருந்தது’ என சொல்லியிருந்தார்.
