16 வருஷத்துக்கு முன்பே விஜய் சொன்ன தகவல்… அப்போ அப்பவே தெரிஞ்சிடுச்சா?

 
16 வருஷத்துக்கு முன்பே விஜய் சொன்ன தகவல்… அப்போ அப்பவே தெரிஞ்சிடுச்சா?

வேட்டைக்காரன் படப்பிடிப்பு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க ரசிகர்கள் விஜயைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அப்போது சிலர் வருங்கால முதல்வர் என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்தனர். விஜய் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என்று மாற்றினார்.

16 வருஷத்துக்கு முன்னாடியே ராகுல்கிட்ட இருந்து விஜய்க்கு அழைப்பு வந்துள்ளதாம். 1 மணி நேரம் அவருடன் பேசியுள்ளார். அந்த சமயத்தில் வந்த யூகங்கள், பத்திரிகை செய்தியை எல்லாம் பார்த்ததும் இப்படி எல்லாம் நடந்தா எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாராம் விஜய்.

ஆனால் வருங்காலத்தில் தமிழ் மக்களுக்கும், உலகத்தமிழர்களுக்கும் நல்லது நடக்கும்னா கண்டிப்பா களத்துல இறங்கி பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார் விஜய். எந்த ஒரு அரசு தமிழக மக்களுக்கு நன்மை செய்கிறதோ அவர்களுடன் நானும் எனது சக்தியும் கைகோர்ப்போம். அது எப்போ எப்படின்னுலாம் தெரியாது. சினிமாவுல இந்தளவு வந்ததுக்கு காரணம் நிறைய விஷயம் இருக்கு. அதுல ரொம்ப முக்கியமான விஷயம் உங்களது ஆதரவு என்பது நல்லா தெரியும்.

வருங்காலத்துல அரசியல்ல கால் எடுத்து வைத்தாலும் உங்க ஆதரவு தேவை என்பது எனக்கு நல்லா தெரியும். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வோம். எங்கெங்கே ஏழைங்க இருக்காங்களோ அவங்களுக்கு நல்லது செய்யுங்க. அதுதான் எனக்கு நீங்க கொடுக்குற மிகப்பெரிய கிஃப்ட்னு நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் விஜய்.

From Around the web