மங்காத்தா அஜித்துக்கு டஃப் கொடுக்கும் சிம்பு!.. தக் லைஃப் வீடியோ வெறித்தனம்!…

Published on: May 8, 2024
simbu
---Advertisement---

நாயகன் படத்திற்கு பின் கமலும் மணிரத்தினமும் 36 வருடங்களுக்கு பின் தக் லைஃப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கமலின் விக்ரம் படம் நல்ல வசூலை பெற்றதால் இப்போது இது சாத்தியமாகி இருக்கிறது.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் என 3 நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்தாலும் துல்கர் சல்மான், ஜெயம் ரவி என பலரின் பெயரும் அடிபட்டது.

இதையும் படிங்க: குறி வச்சாச்சு.. வெளியான ‘தக் லைஃப்’ சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது வேற ரகம்

அதன்பின் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி என இருவருமே இப்படத்திலிருந்து வெளியேறுவதாக சொல்லப்பட்டது. அதற்கு பின்னணியில் சில காரணங்களும் சொல்லப்பட்டது. சிம்புவை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மணிரத்தினம் விரும்பியதால், இது பிடிக்காமல் ஜெயம் ரவி வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனும், மணிரத்தினமும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். அதோடு, இப்படத்தில் திரிஷாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி பட ஹீரோயின் பார்ல அடிக்கிற கூத்தை பாருங்க!.. தொடையழகை காட்டி டார்ச்சர் வேற பண்றாரே!..

கடும் வெயிலையும் தாண்டி பல வெளிநாடுகளில் இந்த படப்பிடிப்பை மணிரத்னம் நடத்தி வருகிறார். பத்து தல படத்திற்கு பின் சிம்புவின் படம் எதுவும் வெளியாகவில்லை. ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் இரட்டை வேடங்களில் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை.

thuglife

இந்நிலையில், தக் லைப் படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், மங்காத்தா அஜித் ஸ்டலில் ஜீப்பை வேகமாக ஓட்டி வரும் சிம்பு துப்பாக்கியை எடுத்து ஒருவரை சுடுவது போன கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.