Categories: latest news

நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட்மாஸ்டர்டா… விஜய்க்கே ஆப்படித்த கமல்ஹாசன்… போடு மாஸ்…

Kamalhassan: கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகராக விஜய் இருந்தாலும் பல வருடங்களாக சிம்மாசனத்தில் இருப்பது கமல்ஹாசன் தான். அதை தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நிரூபித்துக் கொண்டே வருகிறார். அதுகுறித்து தற்போது ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசன் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தொடர்ச்சியாக படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் மட்டுமே அவர் நடிப்பில் இந்தியன்2, கல்கி ஏடி 2898 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் ரிலீஸாக இருக்கிறது. இதில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்2 ரிலீஸாக இருக்கிறது.

இதையும் படிங்க: சேனாதிபதி வராரு… அந்த மாஸ் நிகழ்வை வீடியோவாக வெளியிட்டு இந்தியன்2க்கு விளம்பரம் தேடும் லைகா…

அதுப்போல கல்கி படத்தில் முதலில் கமல் வில்லன் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு தோற்றமாகவே இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் முதலில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிக்க இருந்தனர்.

அவர்கள் இருவரும் வெளியேறிய நிலையில் தற்போது அந்த துல்கர் கேரக்டரில் சிம்புவும், ஜெயம் ரவி கேரக்டரில் அசோக் செல்வனும் நடிக்க இருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படம் ஒன்று லீக்கான நிலையில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கமல் சத்யா லுக்கிலும், சிம்பு காளை பட லுக்கிலும் இருந்ததாக ரசிகர்கள் கலாய்த்தனர்.

இதையும் படிங்க: அந்த சீனில் அப்பாஸ் இல்லாம வேறு யாராவது நடிச்சிருந்தா? மனம் திறக்கும் மாளவிகா

இதை தொடர்ந்து, இப்படத்தினை இந்த வருடத்தின் இறுதிக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் வெளிநாட்டு உரிமையை 60 கோடி ரூபாய்க்கு மேல் விற்று தீர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை தான் 60 கோடிக்கு விற்றது. தற்போது அந்த சாதனையை தக் லைஃப் திரைப்படம் முறியடித்து இருக்கிறது. சிம்பு மற்றும்  கமல் முதல்முறையாக இணைந்து நடிப்பதும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

Akhilan

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

33 minutes ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

3 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago