ஜிங்குஜா பாடலுக்கு சிம்புவுடன் இணைந்து கமல் கலக்கல் டான்ஸ்… இதைத்தானே எதிர்பார்த்தீங்க!

str kamal
Thuglife: தக்லைஃப்ல கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு என இது ஒரு வெற்றிக்கூட்டணி. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் இன்று ஜிங்குஜா என்று ஜம்முன்னு வெளியானது.
கமலைப் பொருத்தவரை அவர் ஒரு நடன இயக்குனர். அவருடைய பல படங்களில் நடனம் செம மாஸாக இருக்கும். நடனத்துக்காகவே அவரது படங்கள் பல உண்டு. புன்னகை மன்னன், சலங்கை ஒலி படங்கள்ல அவரது டான்ஸ் மாதிரி எக்காலத்திலும் எந்த நடிகரும் ஆடவில்லை என்றே சொல்லலாம். அப்படி சூப்பரான ஸ்டெப்களை போட்டு ஆட்டத்திலே மன்னன் என்று தெறிக்க விடுவார் கமல்.
ஆடும்போது கமலுக்கு எங்கிருந்துதான் அவ்ளோ எனர்ஜி வரும் என்பது வியப்பாக இருக்கும். அந்த எனர்ஜி நமக்கும் தொற்றிக் கொள்ளும். தக் லைஃப் படத்துக்கான முதல் சிங்கிள் இன்று வெளியானது. ஜிங்குஜா என்ற இந்தப் பாடலை கமலே எழுதியுள்ளார். பாடலில் கமல் சிம்புவுடன் இணைந்து கலக்கலாக ஆடியுள்ளார்.
முதல் பாடலே அருமை என்று தான் சொல்ல வேண்டும். பாடலுக்கேற்ற கலக்கல் நடனம். சிம்புவும் சரி. கமலும் சரி. அவ்வளவு அருமையான நடனத்தை ஆடி அசத்தி இருக்கிறார்கள். அதிலும் கமல் நடனம் எப்போது ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பாடலின் இறுதியில் கலக்கலாக ஸ்டெப் போடுகிறார்.

அந்த உற்சாகத்தில் சிம்புவும் இணைந்து தன் திறமையைக் காட்டுகிறார். பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது என்று கமெண்ட்டில் இலங்கையில் இருந்து கூட ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பாடலும் ரம்மியமாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் இசையும் அருமையாக உள்ளது. இனி ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் இந்தப் பாடல்தான் ஒலிக்கும் என்பது உறுதி.
கமல் படத்தில் தான் ஆடியது பற்றி கூறும்போது, நாயகன் படத்திலேயே நான் ஆடலைன்னுதான் சொன்னேன். மணி சார்தான் ஆடச் சொன்னார். அப்புறம் அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ அப்படி ஆடினேன். அதுமாதிரி தான் சிம்பு என்ன ஒரு எனர்ஜி. அவரு அவ்ளோ எனர்ஜி கொடுக்கும்போது நாமும் கொஞ்சமாவது கொடுக்க வேணாமான்னு தான் ஆடினேன் என்கிறார் அடக்கத்துடன் கமல்.