ThugLife: தக் லைஃப் விழாவில் சிலம்பரசனுக்கு கமல் செய்த சூப்பர் விஷயம்… பெரிய மனுஷன் தான்!

ThugLife: கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்பட விழா குறித்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் சில விஷயங்கள் பார்ப்பவரை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் படம் கடைசி கட்ட ரிலீஸ் வேலைகளில் இருக்கிறது.
முதலில் இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ரவி மோகன் மற்றும் துல்கர் சல்மான் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் துல்க்கர் வெளியேற அவரிடத்தில் முதலில் உள்ளே வந்தவர் சிலம்பரசன்.
ஏற்கனவே ரவி மோகன் மற்றும் சிலம்பரசன் இடையே பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. அவர் உள்ளே வந்தால் தன்னால் நடிக்க முடியாது எனக்கு கூறி ரவி மோகன் திடீரென படத்தில் இருந்து வெளியேறினார். இப்படத்தில் கமல்ஹாசன் போல மற்ற நடிகர்களும் முக்கிய இடம் என்பதால் படக்குழு முதலில் குழம்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் பின்னர் இது குறித்து மணிரத்னம் சரியான முடிவை எடுத்து ரவி மோகனை வெளியேற்றி அந்த இடத்தில் அசோக் செல்வனை கொண்டு வந்திருக்கிறார். சிலம்பரசன் கதாபாத்திரத்தை மொத்தமாக மாற்றி அவருக்கு கமல்ஹாசன் அளவில் சமமான இடத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தன்னுடைய படங்களின் சூட்டிங்கை கூட தள்ளி வைத்துவிட்டு தக் லைஃப் படத்திற்காக சிலம்பரசன் முழு உழைப்பை போட்டு இருக்கிறார். இதனால் அவருடைய காட்சிகள் விரைவிலேயே படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதற்கு வருகை தந்த சிலம்பரசனை கமல்ஹாசன் தன்னுடைய மகன் போல் பாவித்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் உள்ளே வரும்போது இவர் முன்பாக சென்று அவரை தனியாக நிறுத்தி புகைப்படம் எடுக்க வைத்தது.
சிம்புவை அரங்கத்திற்குள் தானாகவே அழைத்து வந்து தனியாக புகைப்படம் எடுங்கன்னு சொன்னது மட்டுமில்லாமல் சாப்பிட போகும்போது இவர் உக்காராம சிம்புவுக்கு இடம் பிடித்து அவரை உக்கார வைத்து இலையை விரித்து சாப்பாடு வைங்கன்னு சொல்ற எங்க "ஆண்டவர்" எப்பவும் தங்கம் சார்♥️#Thuglife#KamalHaasan pic.twitter.com/O5y67ZyMqL
— SundaR KamaL (@Kamaladdict7) April 19, 2025
சாப்பிட உட்காரும்போது சிலம்பரசனுக்காக காத்திருந்து அவரை உட்கார வைத்தது. அருகில் உட்கார்ந்தவரின் இலையை தானே விரித்து கொடுத்தது என பார்ப்பவர்களுக்கு உலகநாயகனின் செயல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பிரஸ்மீட் பேசும்போது, நான் நடிகன் என்பதை விட ரசிகன் கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றி பெறும். அது எவ்வளவு அளவு என்பதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.