வடிவேல் ஹீரோவாக நடிக்க வேண்டிய படத்தில் நடித்த விஜய்!.. நினைச்சி கூட பாக்க முடியல..

by Rohini |   ( Updated:2023-03-03 16:24:00  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழக மக்கள் கொண்டாடும் வைகைப்புயலாக மாறியிருப்பவர் நடிகர் வடிவேலு. இவரின் அறிமுகம் எப்படிப் பட்டது என்பதை பல செய்திகளில்
நாம் படித்திருப்போம். அது ஒரு புறம் இருக்க இதுவரை தெரியாத ஒரு விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

விஜய் கெரியரிலேயே மிகவும் அதிகமாக கொண்டாடப்பட்ட படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற திரைப்படம். இந்தப் படத்தை எழில் என்பவர் இயக்கினார். ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தவர் வடிவேலு என்று சொன்னால் நம்புற மாதிரியா இருக்கிறது. ஆனால் அது தான் உண்மை.

vijay1

vijay1

இயக்குனர் எழிலும் வடிவேலுவும் நண்பர்களாம். எழிலில் அறிமுகம் படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். இந்தப் படத்தின் கதையை வடிவேலுவிடம் சொல்லி ‘ நீ நடிக்கிறீயா?’ என்று கேட்டாராம். வடிவேலுவும் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு அழுதுவிட்டாராம். அந்த அளவுக்கு கதையில் ஊன்றி போய்விட்டாராம். அதன் பின் எழிலை அழைத்துக் கொண்டு வடிவேலுவுக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் சென்றிருக்கிறார்.

தயாரிப்பாளர்களும் கதையை கேட்டு பிடித்துப் போக ‘யார் ஹீரோவாக போடலாம்?’ என்று கேட்க அதற்கு எழில் வடிவேலு தான் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட சில தயாரிப்பாளர்கள் வடிவேலுவா? என்று விரட்டிவிட்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வடிவேலு ஒரு வளர்ந்து வரும் நடிகராக தான் இருந்தார்.

vijay2

vijay2

இதை உணர்ந்த வடிவேலுவும் எழிலிடம் ‘ எனக்கு காமெடியில் இப்பொழுது தான் ஒரு டிராக் அமைந்திருக்கிறது, நான் அந்தப் பாதையிலேயே போய் விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு விலகிவிட்டாராம். அதன் பின் எழிலின் மற்றொரு நண்பர் மூலம் முரளியை அணுகியிருக்கிறார்கள். ஆனால் முரளியும் அந்த நேரத்தில் படு பிஸியான நடிகராக இருந்ததனால் அவராலும் நடிக்க முடியவில்லையாம்.

இதையும் படிங்க : உண்மையான கலைஞனா இருந்தா இத செஞ்சிருக்கனும்.. இளையராஜா, ரஹ்மானை வெளுத்து வாங்கிய ஸ்ரீபிரியா..

கடைசியாக சூப்பர் குட் பிலிம்ஸை அணுக அவர் மூலம் தான் விஜய் இந்தப் படத்திற்குள் நுழைந்திருக்கிறார். அதன் பிறகே துள்ளாத மனமும் துள்ளும் படம் டேக் ஆஃப் ஆகியிருக்கிறது. இந்த சுவாரஸ்ய தகவலை செய்யாறு பாலு அந்தப் பேட்டியில் கூறினார்.

Next Story