துருவநட்சத்திரம் ரிலீஸ் எப்போது? மதகஜராஜா மாதிரி மீண்டு வருமா?

by sankaran v |   ( Updated:2025-03-31 20:51:38  )
thuruva natchathiram
X

#image_title

Thuruvanatchathiram movie release: 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபட்டு வெளியான படம் மதகஜராஜா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குனர் சுந்தர்.சி. என்றாலே காமெடிக்குப் பஞ்சம் இருக்காது.

அதிலும் சந்தானம் காமெடி நல்ல ஒர்க் அவுட் ஆகி இருந்த நேரம். இந்தப் படம் எடுத்து முடித்து ரிலீஸ் ஆக முடியாமல் பெட்டிக்குள் முடங்கிப் போனது. அதன்பிறகு இந்த ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதற்கு முக்கியமான காரணம் இப்போது காமெடிக்குப் பஞ்சம் என்றார்கள். அதனால் கலக்கல் காமெடியுடன் வெளியான மதகஜராஜா விஷால், சந்தானம், சுந்தர்.சி. காம்போவில் வெளியாகி சக்கை போடு போட்டது.

அதே போல விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படமும் நீண்ட நாள்களாக வெளியாக முடியாமல் பொருளாதாரச் சிக்கலால் பெட்டிக்குள் முடங்கிப் போய் உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்தை ரசிகர்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமுக்கு வீரதீர சூரன் 2 படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

gowtham menon vikramஇந்த நிலையில் துருவ நட்சத்திரம் படமும் வெளியானால் மாபெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தப் படமும் மதகஜராஜா மாதிரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகுமா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

மதகஜராஜா, துருவநட்சத்திரம் என்ற இந்த இரு படங்களுக்கும் என்ன வித்தியாசம்னா பொருளாதாரச் சுமை தான். துருவநட்சத்திரம் படத்துக்கு பொருளாதாரச்சுமை அதிகம். ஆனாலும் அந்தப் படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இவ்வளவு முயற்சி எடுத்தும் அந்தப் படத்தை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கிய துருவநட்சத்திரம் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிதுவர்மா, பிருத்விராஜ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். 7 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. 2017ல் தொடங்கப்பட்ட இந்தப் படம் 2018ல் வெளியாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story