லியோ திரைப்படத்தை அதிகபட்சமாக 80 சதவீதம் பங்கு தொகை கேட்டு தியேட்டர்களை விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு நெருக்கடி கொடுத்து விற்றதாக திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியை ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் பதிவிட்டு லியோ படம் தியேட்டர்களை அட்டை போல எப்படி உறிஞ்சிருக்கு பாருங்க என விளாசி வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படத்தால் தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம், இப்படியே தொடர்ந்தால் தியேட்டர்கள் இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த நிலையில், அந்த வீடியோ க்ளிப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தாமரை பூவுக்கும்.. தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை!.. லியோ வைப்பில் தங்கலான் நாயகி!..
ஒரு பக்கம் லியோ திரைப்படம் உலகளவில் வசூல் ஈட்டி வருவதாக விஜய் தரப்பு கூறி வரும் நிலையில், அந்த படம் ஓடவே இல்லை என்றும் எல்லாமே பித்தலாட்டம் என ரஜினி மற்றும் அஜித் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம் பேசியதையே மேற்கோளாக காட்டி ரஜினி ரசிகர்கள், ”திரையரங்குகளை காவு வாங்க வந்த லியோ” என பதிவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இத மட்டும் காட்ட சொல்லுங்க!.. நான் மீசையை எடுக்குறேன்.. மீண்டும் சவாலுக்கு ரெடியான மீசை ராஜேந்திரன்…
லியோ படத்திற்கு புக்கிங்கே இல்லை என்றும் தியேட்டர்கள் காத்து வாங்குவதாகவும் பச்சை நிறத்தில் இருப்பதாகவும் தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில், புக் மை ஷோ தலைமை அதிகாரி ஜெயிலர் படம் 6 மில்லியன் டிக்கெட் விற்பனையை நடத்திய நிலையில் லியோ 7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையை நடத்தி நம்பர் ஒன்னாக மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…