Connect with us

Cinema News

விமர்சனத்தில் டிவிஸ்ட் வைத்த ப்ளூசட்டை மாறன்… கழுவி ஊற்றிய பிரபல விநியோகஸ்தர்…

தமிழ் டாக்கீஸ் என்ற யூட்யூப் சேன்னலில் பல வருடங்களாக திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் ப்ளூசட்டை மாறன். தனது மனதில் பட்டதை மிகவும் வெளிப்படையாக தனது விமர்சனத்தில் கூறுவதால் அவ்வப்போது இணையத்தில் சர்ச்சையாவது உண்டு.

சமீபத்தில் கூட “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்களை வைத்தார் ப்ளூசட்டை மாறன். இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “ப்ளூசட்டை மாறன் மீது எனக்கு பயங்கர கடுப்பு இருக்கிறது. அவர் யூட்யூப் சேன்னல் மூலம் காசு சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல திரைப்படங்களை மிகவும் இளக்காரமாக விமர்சனம் செய்கிறார். இறங்கி எதாவது செய்யலாம் என்ற அளவுக்கு கோபம் வருகிறது” என மிகவும் காட்டமாக கூறினார்.

கௌதம் மேனன் இவ்வாறு கூறியது இணையத்தில் தீயாக வைரல் ஆகியது. பலரும் கௌதம் மேனன் கூறியதற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதே போல் பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தை ப்ளுசட்டை மாறன் “இது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் அல்ல” என கூறினார். இது தொடர்பாக பார்த்திபனும் ப்ளுசட்டை மாறனும் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வந்தனர். இச்சம்பவத்தை நாம் பலரும் அறிந்திருப்போம்.

இந்த நிலையில் ப்ளூசட்டை மாறன் சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு விமர்சனம் செய்திருந்தார். அந்த வீடியோவின் தொடக்கத்தில் அத்திரைப்படத்தை குறித்து நல்லபடியான கருத்துக்களை கூறிவந்த மாறன், அதனை அப்படியே நிறுத்திவிட்டு, “இது வரை நான் கூறிய விமர்சனம், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முட்டுக்கொடுப்பவர்களுக்கானது. அவர்களுக்கு இது போதும், இனிமேல் நாம் உண்மையான விமர்சனத்தை பார்க்கலாம்” என்று அத்திரைப்படத்தின் மேல் கடும் விமர்சனங்களை வைத்தார். இது போன்ற டிவிஸ்ட்டை பார்வையாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளரும், திரைப்பட விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம், “இந்த ப்ளூசட்டை மாறனை குறித்தெல்லாம் கவலைப்படாதீர்கள். அவரின் விமர்சனத்தை பார்த்து யாரும் படத்திற்கு வரப்போவதே கிடையாது. அவரை கண்டுகொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது” என கடுமையாக பேசியுள்ளார்.

ப்ளூசட்டை மாறனின் விமர்சனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒரு பக்கம் சிலர் “ப்ளூசட்டை மாறனுக்கு விமர்சனம் செய்வதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது” எனவும் ஆதரவாக பேசிவருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top