சிவகார்த்திகேயனை விட நாங்களாம் சீனீயர்...இந்த சீனே இங்க வேண்டாம்...உடைத்து பேசும் தியேட்டர் உரிமையாளர்..
சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் இருந்தபோதே மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர். அப்போதே அவரை ரசிக்ககூடிய ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அதனை தொடர்ந்து “மெரினா” என்ற திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் திரையுலகில் அடி எடுத்துவைத்தார். அதன் பின் நடந்ததெல்லாம் ஆச்சரியம்தான்.
தமிழின் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் தற்போது சிவகார்த்திகேயனும் ஒருவர். விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்களுக்குப் பிறகு மாஸ் ஓப்பனிங் உடைய நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன்தான். தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என அவரை கூறுவதும் உண்டு. இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாளில் தியேட்டர்களே திருவிழா போல் காட்சியளிக்கும்.
சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வருகிற தீபாவளிக்கு இவர் நடித்த “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் கோவை திரைப்பட வெளியீட்டாளர் சங்கத்தின் உறுப்பினரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம், “கொரோனா காலத்திற்கு பிறகு சில நடிகர்கள் ‘சிவகார்த்திகேயனை விட நாங்கள் எல்லாரும் சீனியர்கள். அவரே இப்போது 30 கோடி சம்பளம் வாங்குகிறார். அதே போல் எங்களுக்கும் 30 கோடி கொடுங்கள்’ என கேட்கின்றனர். இங்கே சீனியர், ஜூனியர் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. யாருக்கு ஓப்பனிங் இருக்கிறது என்பது தான் முக்கியம்.
இன்று இருக்கின்ற டாப் ஹீரோக்களில் விஜய் அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்குத்தான் மாஸ் ஓப்பனிங் இருக்கிறது. இதை நான் அடித்துக் கூறமுடியும். ஒரு படம் வெளியாகி ஓடுகிறதா? இல்லையா? என்பது எல்லாம் விஷயம் அல்ல. ஓப்பனிங் யாருக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதன் படி பார்த்தால் விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்குத்தான் ஓப்பனிங் இருக்கிறது. வேறு யாருக்கும் இல்லை” என திறந்த மனதோடு கூறியுள்ளார்.
திருப்பூர் சுப்ரமணியம் இவ்வாறு கூறிய செய்தி இணையத்தில் பரவி வந்ததால் ரசிகர்களிடையே சிறு பூசல் ஏற்பட்டது. எனினும் பலர் சிவகார்த்திகேயனின் வியக்கதக்க வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர்.