அடுத்து அந்த ஹீரோவை டிக் செய்த வேட்டையன் பட இயக்குனர்!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!…

Published on: May 3, 2024
vettayan
---Advertisement---

பத்திரிக்கையாளராக இருந்து சினிமாவில் இயக்குனராக மாறியவர் தா.செ.ஞானவேல். ராம்கோபால் வர்மா சூர்யாவை வைத்து இயக்கிய ‘ரத்த சரித்திரம்’ படத்தின் தமிழ் வெர்சனுக்கு வசனம் எழுதியவர் இவர்தான். இதுதான் இவரின் முதல் படம். அடுத்து, ராதாமோகன் இயக்கிய பயணம் மற்றும் தோனி படத்திற்கும் வசனம் எழுதினார்.

அதன்பின்னரே இவர் இயக்குனராக மாறினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘கூட்டத்தில் ஒருவன்’. ரொமாண்டிக் காமெடி கதையாக வெளிவந்த இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தோல்வி அடைந்தது.

Also Read

இதையும் படிங்க: கம்முனு சம்பளத்தை வாங்கிட்டு போயிருக்கலாம்!… இப்போ ஒன்னும் இல்லாம போச்சே!.. புலம்பும் விஷால்…

அப்படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து ஞானவேல் இயக்கிய படம்தான் ஜெய்பீம். இருளர் குடும்பத்தினருக்கு போலீசார் செய்த கொடுமையை கதையாக அமைத்து சிறப்பாக இயக்கி இருந்தார். இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இது உண்மை கதை என்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதோடு, இப்படம் விவாதங்களையும் துவக்கி வைத்தது.

எனவே, இருளர் குடும்பத்தினருக்கு அரசு சில உதவிகளையும் செய்தது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி தரவும் முன்வந்தார். அதன்பின் அரசு நிலம் ஒதுக்கி தந்தது. ஜெய்பீம் படத்திற்கு பின் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ரஜினியுடன் கூட்டணி அமைத்தார் ஞானவேல்.

இதையும் படிங்க: எனக்கு 70 உனக்கு 80.. ‘வேட்டையன்’ செட்டில் இருந்து படுமாஸாக போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள்

லைக்கா நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, ரித்திகா சிங் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு, சமூக கருத்துள்ள படமாகவும் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

nani

இந்நிலையில், அடுத்து தெலுங்கு சினிமா நடிகர் நானியுடன் ஒரு படத்தில் ஞானவேல் இணையவிருக்கிறார் என சொல்லப்படுகிறது. வேட்டையன் படத்தில் ராணா நடிக்க வேண்டிய வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நானிதான். ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லாததால் நடிக்கவில்லை. அப்போது ஏற்பட்ட நட்பு காரணமாக இருவரும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.