Cinema History
அந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. எம்.எஸ்.வியிடம் கறாராக சொன்ன டி.எம்.எஸ்!… காரணம் இதுதான்!..
1946ம் வருடம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானவர்தான் டி.எம்.சவுந்தரராஜன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். துவக்கத்தில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் ஒரு பக்திமான். கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் எப்போதும் இவரின் நெற்றியில் விபூதி பூசப்பட்டிருக்கும்.
நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவில் நுழைந்தார். சில பக்தி படங்களில் நடித்தார். அதன்பின் முழுநேர பாடகராக மாறினார். ஏழு வயது முதலே இசையை கற்றுகொண்டார். அப்போதே கர்நாடக இசையையும் கற்றுக்கொண்டார். 23 வயதிலேயே மேடைகளில் பாட துவங்கினார்.
இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..
1950,60களில் தமிழ் திரையுலகில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார். குறிப்பாக அந்த காலகட்டத்தில் சினிமாவில் இரு பெரும் ஜாம்பாவான்களாக இருந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி ஆகிய இருக்கும் பாடல்களை பாடியது இவர்தான். இருவருக்கும் அவரே பாடினாலும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலை மாற்றி பாடியிருப்பார்.
பாடகராக இருந்தாலும் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருந்தவர்தான் டி.எம்.எஸ். சினிமாவில் பாடினாலும் அவ்வப்போது கோவில்களில் பக்தி பாடல்களை பாடுவார். அப்படி பாடும்போது சினிமா பாடலை பாடவே மாட்டார். இதை கொள்கையாகவே அவர் கடைபிடித்து வந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..
ஒருமுறை எம்.எஸ்.வி நடத்திய கச்சேரி ஒன்று கோவிலில் நடந்தது. அதில், டி.எம்.எஸ் சில பக்தி பாடல்களை பாடினார். அப்போது ‘என்னடி ராக்கமா’ பாடலை பாடும்படி டிம்.எம்.எஸ்-இடம் எம்.எஸ்.வி சொல்ல ‘மன்னிச்சிடுங்க. கோவில் கச்சேரியில் நான் சினிமா பாடலை பாடமாட்டேன்’ என சொல்லி மறுத்துவிட்டார் டிம்.எம்.எஸ்.
இத்தனைக்கும் டிம்,எம்.எஸ்-ஸின் வளர்ச்சியில் எம்.எஸ்.விக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், தனது கொள்கையை அவருக்காக டி.எம்.எஸ் மாற்றிக்கொள்ளவில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருந்த டி.எம்.எஸ் ‘எம்.எஸ்.வி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், அவருக்காக என் கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது’ என சொல்லியிருந்தார்.