Connect with us
tms

Cinema History

என்னால அந்த பாட்டை பட முடியாது!.. அடம்பிடித்த டி.எம்.எஸ்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…

நடிகர் சிவாஜி கணேசனுக்கு பல வெற்றிப் பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலை மாற்றி பாடும் திறன் கொண்டவர். சினிமாவில் நடிக்க வந்து பாடகராக மாறிய டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் சினிமாவில் அறிமுகமானது முதல் பெரிய ஹீரோக்களாக சினிமாவில் கோலோச்சிய காலம் வரை அவர்களுக்கு பல பாடல்களை பாடியது டி.எம் சவுந்தரராஜன்தான்.

எம்.ஜி.ஆ மற்றும் சிவாஜிக்கு ஆகியோர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் யேசுதாஸ் ஆகியோர் சில பாடல்களை பாடியிருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியது டி.எம்.எஸ்தான். இருவருக்கும் பல காதல், தத்துவ, சோக மற்றும் உற்சாக பாடல்களை அவர் பாடியுள்ளார். அதேபோல், ரசிகர்கள் சிலாகித்து கேட்ட பல பாடல்களுக்கு பின் சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது. அப்படி ஒரு சம்பவத்தைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சரோஜா தேவி ஆகியோர் நடித்து 1961ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாலும் பழமும். இந்த படத்திற்காக ஒரு பாடலை எம்.எஸ்.விஸ்வநாதனும் இசையமைத்து கொடுத்துவிட்டார். கண்ணதாசன் எழுதி கொடுத்துவிட்டார். டி.எம்.சவுந்தரராஜனுக்காக ரிக்கார்டிங் தியேட்டரில் பீம்சிங்கும், எம்,எஸ்.வியும் காத்திருந்தனர். அப்போது தொலைப்பேசியில் பீம்சிங்கிடம் பேசிய டி.எம்.எஸ் ‘எனக்கு குரல் சரியில்லை. ஜலதோஷம் பிடித்துள்ளது. எனவே ரிக்கார்டிங்கை கேன்சல் செய்து விடுங்கள். இரண்டு நாட்கள் கழித்து வந்து பாடுகிறேன்’ என சொன்னாராம்.

இதைக்கேட்ட பீம்சிங் ‘இல்லை. இந்த படத்தில் இந்த பாடலை சிவாஜி மழையில் பாடுவது போலத்தான் எடுக்கவுள்ளேன். எனவே, ஜலதோஷம் பிடித்தது போல் பாடினால் பொருத்தமாகவே இருக்கும்’ என சொல்லி டி.எம்.எஸ்-ஐ வரவழைத்து பாட வைத்தாராம். அப்படி டி.எம்.எஸ் பாடிய அந்த பாடல்தான் ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’ பாடலாகும்.

அந்த பாடலை நன்றாக உற்றுக்கேட்டால் டி.எம்.எஸ் சொன்னது உண்மைதான் என்பது நமக்கு தெரியவரும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top