Connect with us

Cinema News

சமூக கருத்துகளை தமிழ் சினிமாவில் விதைத்த முதல் படைப்பாளி; கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் இன்று

கருணாநிதி, தூக்குமேடை என்ற நாடகத்தை எழுதிய அரங்கேற்றிய போது நடிகவேள் எம்ஆர் ராதா கொடுத்த பட்டம்தான் ‘கலைஞர்’. அதன்பின் கருணாநிதி என்ற பெயரை விட கலைஞர் என்ற பெயரே நிலைத்துப்போனது. தனக்கு கிடைத்த இந்த பட்டத்தையே ஒரு கட்டத்தில் சற்று மாற்றி, நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞானி என்ற பட்டத்தை கருணாநதி வழங்கினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

சமூக கருத்துகள்

புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியம் என இருந்த தமிழ் சினிமாவில், சுய மரியாதை, தன்மானம், தீண்டாமை, வீரம், விவேகம் என சமூக உணர்வுகளை கொண்ட கருத்துகளை, தன் வீரியமிக்க எழுத்துகளால் விதைத்த முதல் படைப்பாளிதான் கருணாநிதி.

சினிமா செய்திகள் கருணாநிதி 100வது பிறந்த நாள்

Karunanidhi

இரட்டை குதிரை சவாரி

சினிமா, அரசியல் என இரட்டை குதிரை வண்டியில் சவாரி செய்து தனது அரசியல் பயணத்துக்கு, தேவையான அங்கீகாரத்தை, அடையாளத்தை சினிமா மூலம் வளர்த்துக்கொண்ட வித்தைக்காரர். இவரை போலவே, சினிமாவை அரசியல் பயணத்துக்கு நன்றாக பயன்படுத்திக்கொண்ட மற்றவர் ஒருவர் அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

65 ஆண்டுகால சினிமா பயணம்

சிறுவயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராக தன்னை வளர்த்துக்கொண்ட கருணாநிதி நாடகங்களுக்கு வசனம் எழுதினார். சினிமாவுக்கு திரைக்கதை எழுதினார். 65 ஆண்டுகால சினிமா பயணம் 1947ம் ஆண்டில், ராஜகுமாரி படத்தில் துவங்கியது. 2016ம் ஆண்டில் தனது 92 வது வயதிலும் பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் படம் வரை நீடித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் சின்னத்திரையில், இவர் எழுதிய நாடகத்தொடரான ‘ராமானுஜர்’ அதிக வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள் கருணாநிதி 100வது பிறந்த நாள்

Karunanidhi

அனல் பறந்த பராசக்தி பட வசனங்கள்

தமிழ் ஆர்வமும், இலக்கிய புலமையும், கவிநயமும் மிக்க கருணாநிதியின் வசனங்களை பேசி முதலில் நடித்தவர் எம்ஜிஆர் தான், 1947ல் வந்த ராஜகுமாரி, கருணாநிதி வசனம் எழுதிய முதல் படம். அடுத்து, 1952ம் ஆண்டில், சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த ‘பராசக்தி’ படத்தின் வசனங்கள், பட்டிதொட்டி எங்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. மூட நம்பிக்கைக்கு எதிரான கருணாநிதியின் வசனங்களை, சிவாஜி தனது குரலில் கர்ஜித்த காட்சிகளை பார்த்து, சினிமா ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயினர்.

சினிமா செய்திகள் கருணாநிதி 100வது பிறந்த நாள்

Karunanidhi

ஆறுமுறை தமிழக முதல்வர்

தமிழ்நாட்டின் ஆறுமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அரசியலில் இருந்தாலும் சினிமா மீதும் தனது கவனத்தை கொண்டிருந்தார். அரசியல் பணிகளுக்கு நடுவிலும், சினிமா விருது விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மணிக்கணக்கில் நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியை ரசிப்பார். ப்ரிவியூ காட்சிகளில், புதிய படங்களை பார்த்து ரசிப்பார். படத்தின் இயக்குநர், நடிகர்களை வியந்து பாராட்டுவார். அவர்களுக்கு கடிதமும் எழுதுவார்.

முதுமை அவரது உடல் நலத்தை பாதித்த காலகட்டங்களிலும், சினிமாத்துறையில் ஒரு இளமை நாயகனாகவே, அவர் தனது படைப்புத்திறனை வெளிப்படுத்தினார். நடிகர் நடிகைகளுக்கு பலவிதமான நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். சினிமா துறையில் அவ்வப்போது ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு ஒரு முதலமைச்சராக, சில தீர்வுகளை வழங்கினார்.

சினிமா செய்திகள் கருணாநிதி 100வது பிறந்த நாள்

Karunanidhi

இன்று 100வது பிறந்த நாள்

அரசியலை கடந்து, சினிமா துறையில் உள்ளவர்களுக்கு ஒரு முன்னோடியாக, வழிகாட்டினார் கருணாநிதி என்றால் அது மிகையல்ல.

இன்று அவரது 100வது பிறந்த நாளை தமிழ் திரையுலகினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top