பாக்கியலட்சுமி: பூஜ்ஜியமாகும் கோபி… அப்பா ரூட்டில் ஜொல்லு பார்ட்டியான செழியன்…

BhagyaLakshmi: விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக இருக்கும் பாக்கியலெட்சுமி சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அம்ருதாவின் அம்மா நேராக வந்து கணேஷ் அம்மா, அப்பாவை பார்த்து ஏன் நிலா பத்திலாம் சொல்றீங்க எனக் கேட்கிறார். நாங்க சொல்லல அவன் மொபைல் பாத்தப்ப சொல்ல வேண்டியதா போச்சு எனக் கூறுகிறார். நிலா எழில தான் அப்பாவா நினைக்கிறா?

கணேஷ் எந்த உறவை சொல்லிக்கிட்டு வரக்கூடாது எனக் கூறி கிளம்பி விடுகிறார். நேரில் கணேஷ் வந்துவிட வாங்க அத்தை எனக் கூப்பிட முகத்தினை திருப்பி சென்று விடுகிறார். அப்பா, அம்மாவிடம் வந்தவர் அம்ருதா பற்றி கேட்க அவ பழசை மறந்துட்டு இருக்கதா சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: விஜய்க்கு நோ!. ரஜினி படம்னா ஓகே!. கமல் – சூர்யா முடிவுக்கு பின்னால் இருக்கும் பஞ்சாயத்து இதுதான்!..

அம்ருதா என்னை மறக்க மாட்டா? நம்ம ஒன்னா தான் இருக்க போறோம் எனக் கூறுவிட்டு ரூமுக்குள் செல்கிறார். ஆபிஸில் இருக்கும் கோபி தன்னுடைய மேனேஜரை அழைத்து என்ன காசே இல்லை என சத்தம் போடுகிறார். அந்த நேரத்தில் செந்தில் வந்து என்கிட்ட வாங்குன காச எப்படா கொடுப்ப என்கிறார். இந்த பிரச்னையை முடிச்சிட்டு தரேன்டா. உனக்கு யாரும் கடன் தரவங்க தெரிஞ்சா வாங்கி கொடுடா.

என் பிரச்னையும் முடிச்சிருவேன். உனக்கும் கொடுப்பேன் எனக் கேட்கிறார். ஏன் அந்த கடன்காரனுக்கு என்னை பதில் சொல்ல சொல்றீயா? உன் பிரச்னைக்கு காரணம் நீதான். ஆபீஸ பார்க்காம பாக்கியா பின்னாடி திரிஞ்சதால வந்த வினை என திட்டிவிட்டு செல்கிறார்.

அடுத்து மாலினியை பார்க்க வந்த செழியனுக்கு அவர் ஒரு பரிசை கொடுக்கிறார். அதை பிரித்த செழியன் என் மனசு உனக்கு எப்படி தெரிஞ்சிது. இந்த வாட்சை ரொம்ப நாளா வாங்கணும் நினைச்சேன் என ஜொல்லு விட மாலினி அவர் மீது சாய்ந்து கொள்கிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: தொல்லை செய்த விஜயா… மீண்டும் வட்டிக்கு வாங்கி கடனை அடைத்த ரோகினி…

அடுத்து ராதிகாவை பார்க்க வந்த பாக்கியாவை பல நேரமாக வெயிட் செய்யவிட்டு வெளியில் வருகிறார். பின்னர் பாக்கியா ராதிகாவிடம் பேசணும் சொன்னேனே எனக் கேட்கிறார். கேண்டீன் எங்களுக்கே கொடுங்க எனக் கேட்கிறார். உங்களுக்கு தர விருப்பம் இல்லை. இப்போ என் முடிவு தான் பைனல் என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

 

Related Articles

Next Story