More
Categories: Cinema News latest news

சிறகடிக்க ஆசை: முத்து ஆசைக்கு நோ சொன்ன மீனா அம்மா.. ஸ்ருதியை அவாய்ட் செய்யும் ரவி…

Siragadikka Aasai: முத்து மீனாவின் அம்மாவிடம் சீதாவை பெண் கேட்டு நிற்கிறார். ஆனால் அவரோ ஒரு பொண்ணு புருஷனை விட அவங்க மாமியாரோட தான் அதிக நேரம் செலவழிப்பாங்க. நல்ல மாமியார் அமையலனா வாழ்க்க போராட்டம் தான். ஏற்கனவே மீனா தண்டனை வாழ்க்கை தான் வாழ்றா. அவ எதையும் சொல்லாமல் இருக்கா. இதுல சீதாவை கல்யாணம் செய்து வைக்க எனக்கு விருப்பம் இல்ல எனக் கூறி மறுத்து விடுகிறார். 

அப்போ எனக்கு மரியாதை அவ்வளவு தான எனக் கூறி முத்து கோபத்துடன் வீட்டினை விட்டு கிளம்பி விடுகிறார். அவரை சமாதானம் செய்து கொண்டே கூடே செல்லும் மீனாவிடம், ரவிக்கு சீதா தான் சரியான பொண்ணா இருப்பா எனக் கூறிக்கொண்டே இருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: லியோவை மொத்தமாக கழட்டி விட்ட விஜய்?.. தனியாளாக தொண்ட தண்ணி வத்த போராடும் லோகேஷ் கனகராஜ்!..

ஸ்ருதி வீட்டில் தன்னுடைய பெற்றோர்களிடம் இந்த கல்யாணம் இப்போ வேணாம். நீங்க சொல்ற பையனையே கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் செஞ்சிக்கிறேன் எனக் கூறி விடுகிறார். ஆனால் அந்த பையனுடன் தான் உனக்கு உடனே கல்யாணம் என்கிறார்.

இதனால் ஒரு முடிவுடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் ஸ்ருதி. அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் முத்துவையும், மீனாவையும் வாசலில் பார்க்கிறார் ரவி. அந்த ஸ்ருதிக்கிட்ட பேசாத என கண்டித்து அனுப்புகிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி கால் செய்ய போனை எடுக்கவில்லை. இதனை முத்துவும் கவனித்துவிடுகிறார்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: கல்யாணம் பண்ணிக்கலாமா..? செழியனுக்கு ஷாக் கொடுத்த மாலினி…

இதை மீனாவிடம் சொல்லும் முத்து சீக்கிரம் ரவிக்கு ஒரு நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும் எனக் கூறுகிறார். ரெஸ்டாரெண்ட்டில் பிஸியாக இருக்கும் ரவி, ஸ்ருதி கால் செய்தும் அவாய்ட் செய்து விடுகிறார்.

ரவியின் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும் ஸ்ருதி, என்னை அந்த பையனோட கல்யாணத்துக்கு எல்லா வேலையும் பார்க்க சொல்லிட்டாங்க. ஆனா நீ நான் போன் செய்தாலும் எடுக்க மாட்ற, காலையும் எடுக்க மாட்ற. முதல எனக்கு ஒரு முடிவு தெரியணும். இல்லனா இந்த இடத்தை விட்டு நான் போக போறது இல்லை எனக் கூறி ஹோட்டலிலே உட்கார்ந்து விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

Published by
Akhilan