பேக் டூ பேக் ஹிட் கொடுத்த தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்!.. தம்பி அட்லீ என்னப்பா ஆச்சு?..

by Rohini |   ( Updated:2023-04-18 07:47:05  )
atlee
X

atlee

தமிழ் சினிமாவில் படம் வருவதற்கு முன்னரே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நடிகர் விஜய். அப்படி ஒரு மாஸை தனக்கென உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். விமர்சன ரீதியாக வெற்றிபெறா விட்டாலும் வசூலில் கோடிகளை அள்ளக் கூடிய படமாக விஜய் படம் அமைந்து விடும்.

அதே போல் தான் விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வாரிசு’ படமும். ஒரு பெரிய நடிகருக்கான ஓப்பனிங் இந்த படத்திற்கும் அமைந்தது. நல்ல ஒரு ஓப்பனிங்கோடு துவங்கிய வாரிசு படம் விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பையே பெற்றது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் விஜயை வைத்து மற்றுமொரு தெலுங்கு இயக்குனர் மீண்டும் களமிறங்க போவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மலினேனி விஜயிடம் சமீபத்தில் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை தெலுங்கு சினிமாவில் ஏற்படுத்தியது. கோபிசந்த் மலினேனி தனது கமர்ஷியல் மசாலா திரைப்படங்களுக்கு பிரபலமானவர். அவர் ரவி தேஜா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த 'கிராக்' மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' ஆகிய இரண்டு பிளாக்ஸ்டஸ்டர் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்க்கு கோபிசந்த் கதை சொல்லியிருப்பது ஒரு வேளை விஜயின் தளபதி 69 படமாகவோ அல்லது தளபதி 70 படமாகவோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தை அட்லீ இயக்க இருப்பதால் அதற்கு அடுத்த படத்திற்கான கூட்டணியாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் செய்த வேலை!.. மாடர்ன் தியேட்டர்ஸில் மாறிய நடைமுறை!..

Next Story