மகேஷ் பாபுவுக்கு இருக்கும் நல்ல மனசு கூட அஜித், விஜய்க்கு இல்லையே!.. என்ன மேட்டரு தெரியுமா?..

by Saranya M |   ( Updated:2022-07-03 06:10:55  )
மகேஷ் பாபுவுக்கு இருக்கும் நல்ல மனசு கூட அஜித், விஜய்க்கு இல்லையே!.. என்ன மேட்டரு தெரியுமா?..
X

கமல்ஹாசனின் விக்ரம் படத்தை சமீபத்தில் பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போயுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டிய அவர் இந்த படத்தை எப்படி எடுத்தீங்கன்னு உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தில் நடித்த விஜய்சேதுபதியின் நடிப்பு மற்றும் பகத் ஃபாசிலின் நடிப்பை பார்த்த மகேஷ் பாபு, இதுக்கு மேல நடிக்க முடியாது. இருவரும் சிறப்பாக நடித்து மிரட்டி இருக்காங்க என வரிசையாக ட்வீட் போட்டு விக்ரம் படத்தை பாராட்டி உள்ளார்.

கடைசியாக, கமல்ஹாசன் சாரை என்னன்னு சொல்லி பாராட்ட, அதுக்கான தகுதியே எனக்கு இன்னும் இல்லைன்னு நினைக்கிறேன். அவருடைய நடிப்புக்கு நான் ஒரு தீவிர ஃபேன் என்று தான் சொல்ல வேண்டும். விக்ரம் படம் பிளாக்பஸ்டர் படம், நியூ ஏஜ் த்ரில்லர் மற்றும் சமூகத்துக்கு தேவையான படம் என்று புகழ்ந்திருக்கிறார் மகேஷ் பாபு.

விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் வரும் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை பற்றியோ அதில் நடித்த நடிகர் சூர்யாவை பற்றி ஒரு வார்த்தைக் கூட அவர் சொல்லாததற்கு சூர்யா ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மகேஷ் பாபு ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில், டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு விக்ரம் படத்தை பார்த்து இப்படியொரு பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், உங்கள் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஏன் ஒரு வார்த்தைக் கூட படத்தை பற்றி பாராட்டவில்லை என்கிற கேள்விகளை எழுப்பி ஃபேன் ஃபைட் நடத்தி வருகின்றனர்.

தளபதி அய்யா என நடிகர் விஜய்யை கமல் பாராட்டி பேசிய வீடியோ டிரெண்டான போதே நடிகர் விஜய் பதிலுக்கு ஒரு ட்வீட் போட்டு தனது நன்றியை தெரிவித்து இருக்கலாம்.

சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கெல்லாம் வாழ்த்து மடல் அனுப்பும் நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் பெருமையாக மாறியுள்ள உலகநாயகனின் விக்ரம் படத்தை பாராட்டி மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாக ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கலாம்.

சக நடிகர்களை பாராட்டினால் தான் திரையுலகம் எந்தவொரு ரசிகர்கள் போட்டியும் இல்லாமல் மேலும், ஆரோக்கியமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகேஷ் பாபு அடுத்ததாக இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனை ராஜமெளலி அணுகியதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், மகேஷ் பாபு பாராட்டி இருப்பது குறிபிடத்தக்கது.

Next Story