லண்டனில் நடைபெற்ற டாம் க்ரூஸ்ஸின் Digger ப்ரீமியர் ஷோ… வெளியானது முதல் விமர்சனம்!
‘Digger’ திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது.

‘டாம் க்ரூஸ்’-ன்னு சொன்னாலே, நமக்கு டக்குன்னு அவர் நடித்த ‘மிஷன்: இம்பாஸிபில்’ படங்கள் தான் உடனே நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர்.
ஆக்ஷனை அப்படியே ஓரம் கட்டி விட்டு பிளாக் காமெடி ஜானரில் டாம் க்ரூஸ் பண்ணியிருக்கும் புதிய ஹாலிவுட் படம் தான் ‘டிக்கர்’ (Digger). அதுவும் இதில் அவருக்கு வயதான லுக்.
இந்த படத்தை ‘தி ரெவெனன்ட்’ புகழ் இயக்குநர் அலெஜான்ட்ரோ இனாரிட்டு தான் இயக்கியிருக்கிறார். படத்தை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
நேற்று (செப்டம்பர் 22-ஆம் தேதி) லண்டனில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நடைபெற்றது. தற்போது, இந்த ப்ரீமியர் ஷோவை பார்த்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர்.








