தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும். அந்த வகையில் நாளை 4 படங்கள் வெளியாகின்அன. அவை என்ன என்பதை இங்கே காண்போம்.
- காளிதாஸ் 2
நடிகர் பரத் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ‘காளிதாஸ்’. ஒரு நேர்மையான, அதேசமயம் அழுத்தமான காவல்துறை அதிகாரியாக பரத் அசத்திருப்பார் . அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகிறது. அதே டீமுன் பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி, பிரகாஷ் ராஜ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் பல திடுக்கிடும் சம்பவங்களுடன் பரபரப்பான திரைகதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- லீடர்
‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான லெஜெண்ட் சரவணன், தனது இரண்டாவது படைப்பாக ‘லீடர்’ திரைப்படத்துடன் நாளை களம் இறங்குகிறார். முதல்படமான தி லெஜெண்டில் சில குறைகள் இருந்தாலும் இந்தப் படத்திலும் பட்ஜெட்டில் மட்டுமல்ல தனது நடிப்பிலும் மெருகேறியிருக்கிறார் என்பது டிரைலரை பார்க்கையில் தெரிகிறது. கருடன் வெற்றியை அடுத்து துரை செந்தில் இயக்கியுள்ள படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பி மற்றும் சி சென்டர் பார்வையாளர்கள் மற்றும் மாஸ் ஆக்ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களை குறிவைத்து இந்தப் படம் வெளியாகிறது.
- கார்மேனி செல்வம்
இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் சமுத்திரக்கனி. சமூக அக்கறைகொண்ட கருத்துக்களை திரைப்படங்கள் மூலம் சொல்லும் அவரது நடிப்பில் நாளை வெளியாகும் படம் கார்மேனி செல்வம். சமுத்ரகனியுடன் கௌதம் மேனன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகளின் மேன்மை, தற்போதைய சமூகத்தில் நடுத்தர மக்கள் சந்திக்கும் பொருளாதார மற்றும் வாழ்வியல் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
- நீளீரா
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ போன்ற படைப்புகள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நவீன் சந்திரா, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நீளீரா . எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரது இந்தப் படமும் ஒரு வித்யாசமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஈழப்போரின் கொடூரமான உளவியலையும், தலைமுறை தலைமுறையாக தொடரும் துயரத்தையும் ஒரு திருமண வீட்டின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை வெளியாகும் இந்த படங்களில் எது வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





