Categories: Cinema News latest news

ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்

Upcoming Movies:  நாளை ஒரே நேரத்தில் 6 முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. அதில் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் நயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அன்னபூரணி’ திரைப்படம். இந்த படங்களுடன் வேறென்னென்ன திரைப்படங்கள் மோத இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

அன்னபூரணி: இந்தப் படத்தில் நயனுடன் சேர்ந்து நடிகர் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜாராணி படத்திற்கு பிறகு இந்த மூவரும் சேரும் திரைப்படமாக அன்னபூரணி திரைப்படம் அமைந்திருக்கிறது. கதைப்படி சுத்தமான சைவ பெண் கதாபாத்திரத்தில் நயன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். சமையல் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதையும் படிங்க: இப்ப மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாமதான்… சூர்யா சொன்னது இப்ப அவருக்கே ஆப்பா போச்சே!…

பார்க்கிங்: ஹரீஸ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாகும் திரைப்படம் பார்க்கிங். மக்கள் தன் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினை வண்டியை பார்க் செய்யும் பிரச்சினைதான். வாடகை வீட்டில் குடியிருக்கும் இருவர் தங்கள் கார்களை பார்க் செய்யும் போது உண்டாகும் பிரச்சினைகளை மையப்படுத்திதான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படமும் மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று தெரிகிறது.

அனிமல்: இந்தி நடிகர் ரன்பீர்கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் நாளை வெளியாகும் திரைப்படம்தான் அனிமல். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகிறது. படத்திற்கான ப்ரோமோஷனும் தீவிரமாக நடந்தது. சென்னையில் ஒட்டுமொத்த படக்குழுவும் வந்திருந்தனர். தாய்ப்பாசம் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருந்தாலும் தந்தை பாசம் பற்றி குறைந்தளவே படங்கள்  வந்திருக்கின்றன. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என ரன்பீர் கபூர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: சோவிற்கு வந்த மிரட்டல்… எல்லாத்துக்கும் காரணம் ஜெய்ஷங்கர்தான்!.. நடந்தது இதுதான்..

வா வரலாம் வா: கிட்டத்தட்ட 10வருட போராட்டங்களுக்கு பிறகு பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் நடிப்பில்  நாளை வெளியாகும் திரைப்படம்தான் வா வரலாம் வா திரைப்படம்.  ரவிச்சந்தர் எல் ஜி மற்றும் சுரேஷ் பாபு ஆர் இணைந்து இயக்கியிருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம் தான் வா வரலாம் வா. இந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறது.

இதே போல் பிக்பாஸ் புகழ் தர்ஷனின்  ‘நாடு’ மற்றும் அறிமுக நடிகர் வி. கார்த்திகேயனின்  ‘சூரகன்’ போன்ற படங்களும் நாளை ரிலீஸாக இருக்கிறது.

Published by
Rohini