தமிழ் சினிமா நடிகர்களின் சொத்து பட்டியல் இதோ!.. நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இவரா?!...

தமிழ்த்திரை உலகின் பணக்கார நடிகர்கள் யார் என்று அலசிப் பார்த்தால் பல தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அதன்படி, நடிகர்களின் டாப் 10 பணக்காரர்கள் லிஸ்ட் இதோ...

10வது இடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருக்கிறார். 1978ல் பிறந்த இவருக்கு இன்று 45 வயது. சொத்து மதிப்பு சுமார் 70 கோடி. 9வது இடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஆக்ஷன் ஹீரோவானவர். 38 வயது ஆன இளமையான கதாநாயகன். சொத்து மதிப்பு சுமார் 118 கோடி.

8வது இடத்தில் நடிகர் கார்த்திக். தற்போது தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரம். தனக்கென்று சரியான திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். வயது 45. சொத்து மதிப்பு 120 கோடி. 7வது இடத்தில் பிரபல நடிகர் விக்ரம். தமிழ்சினிமாவில் டப்பிங் கலைஞராக வந்து தனக்கென தனி முத்திரையைப் பதித்துக் கொண்ட நடிகர். இவரது சொத்து மதிப்பு சுமார் 147 கோடி.

6வது இடத்தில் பிரபல நடிகர் சூர்யா இருக்கிறார். 47 வயதாகும் இவர் திரையுலகம் வந்ததில் இருந்தே சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். சொத்து மதிப்பு சுமார் 184 கோடி.

Dhanush SK

5வது இடத்தில் பிரபல நடிகர் தனுஷ் உள்ளார். வயது 39. சகோதரர் செல்வராகவனுடன் அறிமுகமான இவர் தமிழ்ப்படங்களையும் தாண்டி இந்தி திரை உலகிலும் கால் பதித்து வருகிறார். இவர் சொத்து மதிப்பு சுமார் 244 கோடி.

4வது இடத்தில் அஜீத் இருக்கிறார். 51வது வயதை எட்டிய போதும் இன்றும் துடிப்பு குறையாத நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் தல அஜீத். இவரது சொத்து மதிப்பு சுமார் 294 கோடி.

3வது இடத்தில் இருப்பது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் மிக மூத்த முன்னணி நடிகர். வயது 72. இவரது சொத்து மதிப்பு சுமார் 367 கோடி.

தமிழ்சினிமாவில் தற்போது சுமார் 200 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கும் நடிகர் தளபதி விஜய். பணக்கார நடிகர் பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் இவர் தான். வயது 48. இவரது சொத்து மதிப்பு சுமார் 550 கோடி. தமிழ் சினிமா உலகமே வியந்து நிற்கும் மாபெரும் கலைஞன் கமல்ஹாசன். இவரை விட வேறு யாரும் சினிமாவை அதிகமாக நேசித்து விட முடியாது. வயது 69. இவரது சொத்து மதிப்பு சுமார் 737 கோடி.

 

Related Articles

Next Story