Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள்…இவ்வளவு பெத்த அமவுண்ட்டா??

தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் சம்பளம் என்பது நிலையாக இருந்ததில்லை. அவரவர்கள் நடித்த திரைப்படங்களின் வெற்றித் தோல்விகளை பொருத்தே அவர்களின் சம்பளமும் அமையும்.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அவர்களின் சம்பளம் அதிகரிப்பதை போலவே தொடர் தோல்வி வந்தாலும் சம்பளத்தில் அடி விழும். தொடர்ந்து அதிக தோல்விகள் கொடுத்தால் அவர்கள் நிர்ணயிக்கும் சம்பளத்திற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஆதலால் அவர்களின் சம்பளம் அங்கே குறையும். அதே போல் வெற்றிப் படங்களாக தந்து ஒரு பிசி ஆக்டராக உருவாகினால் அவர்கள் வைப்பது தான் சம்பளமே. அந்த தொகையை தயாரிப்பாளர்கள் கொடுத்து தான் ஆகவேண்டும்.

இவ்வாறு பல ஏற்ற இறக்கங்களை கொண்டது தான் நடிகர்களின் சம்பளத் தொகை. இந்த நிலையில் தற்போது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இடங்களை பிடித்திருக்கும் நடிகர்களை பார்க்கலாம்.

5 ஆவது இடம்:

விஜய்-அஜித் என போட்டி நடிகர்கள் தமிழ் சினிமா மார்க்கெட்டில் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் சைலண்ட்டாக வந்து பட்டறையை போட்டவர் சூர்யா. இவர் நடிக்க வந்த புதிதில், இவருக்கு நடிக்கத் தெரியாது எனவும், இவர் அவ்வளவுதான் எனவும் பல பேச்சுக்கள் அடிப்பட்டன. மேலும் இவரது உயரத்தை பலரும் கேலி செய்தும் வந்தனர்.

ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது அயராத உழைப்பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்தார். சமீபத்தில் வெளியான “சூரரை போற்று”, “ஜெய் பீம்” ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரும் பெற்றிகளை கொடுத்தது. மேலும் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக தோன்றி அசரவும் வைத்தார் சூர்யா. இவ்வாறு தனது அசத்தலான நடிப்பால் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காரந்த சூர்யா சமீப காலமாக ஒரு திரைப்படத்திற்கு ரூ. 40 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதன் மூலம் சூர்யா இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடிக்கிறார்.

4 ஆவது இடம்:

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா ரசிகர்களிடையே உலக நாயகன் என்று பெயர் பெற்றவர் தான் கமல்ஹாசன். இவரது நடிப்பை பற்றி நாம் தனியாக கூறவே தேவையில்லை. சிறுவயதில் இருந்தே தனது வெரைட்டியான நடிப்பால் மக்களை ஈர்த்து வந்த கமல்ஹாசன், பல வேடங்களிலும் கச்சிதமாக பொருந்தினார். குறிப்பாக பத்து கெட் அப்களில் இவர் நடித்த “தசாவதாரம்”, நடிப்பின் மீது ஒரு கலைஞன் இந்த அளவுக்கு வெறியாக இருப்பாரா? என பலரையும் வாயடைக்க வைத்தது.

இடையில் பல சருக்கல்களை கண்ட கமல்ஹாசன் சமீபத்தில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் மூலம் மாபெரும் வசூல் அரசனாக திகழ்ந்தார். 80ஸ் கிட்களில் இருந்து 2கே கிட்ஸ்கள் வரை மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட கமல்ஹாசன் சமீப காலமாக ரூ. 80 கோடி சம்பளமாக பெறுகிறாராம். இதன் மூலம் கமல் இந்த பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருக்கிறார்.

3 ஆவது இடம்:

தமிழ் திரையுலக ரசிகர்களால் “தல” என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்குமார். ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் அஜித். அதன் பின் “அமர்க்களம்” திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக உருமாறினார். குறிப்பாக அஜித் திரைப்படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்கள் வரமாட்டார்கள் என்ற பேச்சுக்கள் இருந்தன. ஆனால் “விஸ்வாசம்” திரைப்படம் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

இவர் நடித்த 61 ஆவது திரைப்படத்தின் டைட்டில் நேற்று வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. நடிப்பு மட்டுமல்லாது பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் திறமையுடன் செயல்படும் அஜித்குமார், ரூ. 100 கோடி சம்பளமாக பெறுகிறாராம். இதன் மூலம் அஜித்குமார் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் நிற்கிறார்.

2 ஆவது இடம்:

இந்திய ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்திற்கு சமீபத்தில் பல திரைப்படங்கள் கைக்கொடுக்கவில்லை. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டார் என சில தகவல்கள் வந்தன. ஆனால் அதன் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை. எனினும் ரஜினிகாந்த் சமீப காலமாக 110 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

முதல் இடம்:

“இளைய தளபதி” என்ற பட்டத்தில் தொடங்கி ஒரு மாஸ் எண்டர்டெயினராக “தளபதி” என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் சரியாக போகவில்லை. எனினும் இவரது மாஸ் சற்றுக்கூட குறையவில்லை என்றே கூறலாம்.

தற்போது விஜய் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக விஜய் ரூ. 120 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். இதன் மூலம் விஜய், ரஜினியையும் ஓவர் டேக் செய்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top