வில்லனும் நானே!..ஹீரோவும் நானே!.. ஹீரோக்கள் வெறித்தனமான வில்லத்தனம் காட்டிய திரைப்படங்கள்…

Published on: December 4, 2022
actors
---Advertisement---

தமிழ் சினிமாவின் டாப் ஹிட் நடிகர்கள் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டியதை போல குறிப்பிட்ட படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்கள். கோலிவுட் மாஸ் நாயகர்களின் வில்லத்தனத்தில் வெளியான டாப் 5 படங்கள் குறித்து உங்களுக்காக.

கோலிவுட்
Enthiran

ரஜினி:

ரஜினி முதல் சில படங்களில் வில்லனாக தான் நடித்தார். அவரின் நாயகனுக்கான மார்க்கெட் அதிகரித்தவுடன் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்தார். சங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் தான். அவரே ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து மாஸ் காட்டினார். அதிலும் சிட்டி ரோபோவின் வில்லத்தனத்துக்கே செம அப்ளாஸ் போடலாம்.

alavandhan

கமல்:

கமல்ஹாசனுக்கு பெரிய லிஸ்ட்டே சொல்லலாம் என்றாலும் இரட்டை வேடத்தினை மட்டும் கணக்கில் கொள்ளலாம். அப்படி பார்க்கும் போது அண்ணனாகவும், தம்பியாகவும் நடித்து வெளியான படம் தான் ஆளவந்தான். இப்படத்தில் எந்தவித சிஜி வேலையும் இல்லாமல் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அவரே நடித்திருந்தார். அதிலும் நந்துவாக மொட்டை தலையுடன் ஜிம்பாடி கெட்டப்பில் அவரை பார்த்து அல்லு விடாதவர்கள் யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

vaali

அஜித்:

வாலி படம் தான் அஜித்தின் கேரியரில் முக்கிய ஏற்றத்தை கொடுத்தது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் இங்கும் அதே அண்ணன் – தம்பி தான். ஆனால் அண்ணனாக வரும் அஜித் தான் வில்லன். வாய் பேச முடியாத வில்லனாக இருந்தாலும் கண்ணாலேயே மிரட்டி இருப்பார். கிளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் செம த்ரில்லராக தான் அமைந்திருக்கும்.

irumugan

விக்ரம்:

வித்தியாசமான கதையுடன் ரிலீஸான திரைப்படம் தான் இருமுகன். பல படங்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்த விக்ரம் இந்த படத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்திருப்பார். வில்லன் லவ் ஒருவித பெண்மை தன்மையுடன் இருப்பதாக காட்டினாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட மாஸ் காட்சிகள் செமையாக அமைந்திருக்கும்.

azhagiya tamil magan

விஜய்:

தளபதி தனது சினிமா கேரியரிலேயே இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் அழகிய தமிழ் மகன் தான். இப்படத்தில் ஸ்மார்ட் வில்லனாக நடித்திருக்கும் விஜயை பார்க்கும் போது மிரட்டலாகவெல்லாம் இல்லை. பெண்களே சைட் அடிக்கும் அளவுக்கு லவ்வர் பாயாக தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஸ் ஹிட்டான தமிழ் படங்களை, ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் செய்யும் டாப் 5 நாசங்கள்… உங்க அலும்பு தாங்கலடா!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.