அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை தட்டித் தூக்கிய ராணி நடிகை!.. வயித்தெரிச்சலில் விருது நடிகை?..
ராணி நடிகையை பார்சல் பண்ணி சினிமாவை விட்டே ஒதுக்கி விட வேண்டும் என வேலை பார்ப்பது அந்த திருமணமான பிரபல நடிகை எல்லாம் கிடையாதாம். எல்லாத்துக்கும் காரணம் அந்த விருது நடிகை தான் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
தனக்கு வந்த வாய்ப்பை உதாசினப்படுத்திய நிலையில், சட்டென கிடைத்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு அந்த படத்தில் ராணியாக நடித்த நிலையில், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதாம்.
இதையும் படிங்க: என்ன ஷாலும்மா இதெல்லாம்!.. நல்லா நாலா பக்கமும் காத்து வாங்குதே!.. ஓபனா காட்டி ஓரங்கட்டுறாரே!..
ஆனால், விருது நடிகையை முன்னணி நடிகர்கள் யாருமே தற்போது கிட்ட கூட நெருங்க விடாத நிலை உருவாகி உள்ள நிலையில், தான் அந்த வயித்தெரிச்சல் காரணமாக ராணி நடிகைக்கு வேட்டு வைத்து வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் கேரளா கனெக்ஷனில் புரளியை கிளப்பி விட்டதே அந்த கேரளத்து நடிகை தான் என்கின்றனர்.
அந்த முன்னணி நடிகருடன் நெருங்கி பழகி வந்த விருது நடிகையை அவரும் விலக காரணமாக ராணி நடிகை சமீப காலத்தில் மாறியது தான் அந்த நடிகையை பயங்கர பொறாமையில் ஆழ்த்தி விட்டதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உங்கம்மா எங்கம்மா இல்லடா!.. இது சினிமா.. எனக்கு யாருமே எண்ட் கார்டு போட முடியாது.. திமிறிய விஷால்!..
கோலிவுட்டில் மற்ற நடிகைகளை பின்னுக்குத் தள்ளி விட்டு முதலிடத்தை ராணி நடிகை பிடித்துள்ள நிலையில், அவரை எப்படியாவது கீழே இறக்கி விட்டு அந்த கோட்டையை தான் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஏகப்பட்ட வேலைகளை அந்த நடிகை செய்து வருகிறார் எனக் கூறுகின்றனர்.
இதுவரை எதற்குமே டென்ஷனாகாமல் பல ஆண்டுகள் சினிமா உலகில் தனது நடிப்பால் சாதித்து வந்த நடிகை தற்போது டென்ஷன் ஆக காரணமே அந்த நடிகை தான் என்பதால் அந்த முன்னணி நடிகரே சமாதானம் படுத்தும் முயற்சியில் தனது ஆட்களை அனுப்பி இருப்பதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
COPYRIGHT 2024
Powered By Blinkcms