டிவியில் எப்ப போட்டாலும் டி.ஆர்.பி.-யில் சம்பவம் செய்யும் 5 திரைப்படங்கள்!. மாஸ் காட்டும் விஸ்வாசம்!..

Published on: January 19, 2024
trp
---Advertisement---

முன்பெல்லாம் திரைப்படங்களின் வியாபாரம் என்பது தியேட்டர்களை நம்பி மட்டுமே இருந்தது. தமிழ்நாடு, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் தியேட்டர்கள் மூலம் கிடைக்கும் வசூல்தான் பிரதானம். ஒருகட்டத்தில் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியதும் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து போனது.

தியேட்டரில் ரிலீஸாகி சில வாரங்களில் அப்படங்கள் தொலைக்காட்சிகளுக்கு விற்கப்பட்டது. இத்தனை வருடங்களுக்கு என ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள். ‘உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என விளம்பரமும் செய்யப்பட்டது. தியேட்டரில் நன்றாக ஓடிய படங்களுக்கு டிவியிலும் வரவேற்பு ஒருபக்கம் எனில், தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெறாத படங்கள் டிவியில் நல்ல டி.ஆர்.பி-யையும் பெற்றதும் நிறைய நடந்திருக்கிறது.

இதையும் படிங்க: தொடக் கூடாத இடத்தில் தொட்டு.. ரெண்டு லட்சம் பேரம் பேசி! நடிகையின் வாழ்க்கையில் நடந்த அவலம்

அந்தவகையில், டிவியில் எப்போது ஒளிபரப்பாலும் பலராலும் பார்க்கப்பட்டு அதிக டி.ஆர்.பி-ஐ பெறும் டாப் 5 படங்கள் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். இதில் 5வது இடத்தில் இருப்பது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீமராஜா படம்தான். இப்படம் தியேட்டரில் வசூலை பெறவில்லை. ஆனால், டிவியில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 16.7 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றிருக்கிறது.

4வதாக தளபதி விஜயின் ‘சர்கார்’ படம் இருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் பலமுறை டிவியில் ஒளிபரப்பாகியும் டி.ஆர்.பியில் 16.9 புள்ளிகளை பெற்று வருகிறது. 3வவது இடத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘அண்ணாத்த’ படம் இருக்கிறது.

இதையும் படிங்க: சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்தது இப்படித்தான்!.. சுவாரஸ்யம் சொன்ன ஆர்.வி.உதயகுமார்…

இந்த படத்தின் வசூல் ரஜினியையே ஏமாற்றியது. ஆனால், டிவியில் இப்படம் எப்போது வெளியானாலும் 17.37 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வருகிறது. இப்படத்தில் இருக்கும் அண்ணன் – தங்கச்சி செண்டிமெண்ட் காட்சிகளும், பாடல்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

2வது இடத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் இருக்கிறது. சசி இயக்கத்தில் சூப்பர் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த இப்படம் எப்போது ஒளிபரப்பானாலும் டி.ஆர்.பி-யில் 17.58 புள்ளிகளை பெறுகிறது. முதலாவது இடத்தில் அதே சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படம் இருக்கிறது. அஜித், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் டி.ஆர்.பி-யில் 18.14 புள்ளிகளை பெற்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: கல்லா கட்ட நினைத்து நயன்தாரா தயாரித்த 5 திரைப்படங்கள்!.. ரிசல்ட் இதுதான்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.