முதல்நாளில் வசூலில் பட்டையை கிளப்பிய டாப்5 தமிழ் படங்கள்… இப்போ சொல்லுங்க சூப்பர்ஸ்டார் யாருனு?

by Akhilan |   ( Updated:2024-09-02 15:34:23  )
முதல்நாளில் வசூலில் பட்டையை கிளப்பிய டாப்5 தமிழ் படங்கள்… இப்போ சொல்லுங்க சூப்பர்ஸ்டார் யாருனு?
X

#image_title

Kollywood: முதல் நாள் ரிலீசில் கோலிவுட்டில் வசூல் குவித்த டாப் 5 திரைப்படங்கள் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முக்கிய பிரபலங்கள் இல்லாமல் தனியாளாக தாங்கிப் பிடிக்கும் நடிகர் குறித்த சுவாரசிய தகவலும் இடம் பெற்றுள்ளது.

கடந்த வருடம் தமிழ் சினிமா மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. வசூல் மட்டுமே மூவாயிரம் கோடியை தாண்டியது. ஆனால் இதில் மிக முக்கிய பங்கு வகித்தது என்னவோ சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படமும், விஜயின் லியோ திரைப்படம் தான். அப்போது நடந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனையும் இதற்கு காரணமாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்

முதலில் வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூலில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் திரைக்கதையில் வலுவான காட்சிகளை நெல்சன் வைக்க அடுத்தடுத்த நாட்களில் வசூல் குவிய தொடங்கியது. இதனால் ரஜினியின் ஆல் டைம் ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்து வசூல் சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து ரிலீஸான விஜய்யின் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை குவிக்கும் என பேச்சுக்கள் தொடர்ந்து அடிபட்டு வந்தது. இதை நடத்திக் காட்ட வேண்டும் என விஜய் ரசிகர்களும், நடக்க விடக்கூடாது என மற்ற ரசிகர்களும் மாற்றி மாற்றி போட்டி போட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: மகளாக ராமமூர்த்திக்கு பாக்கியா செய்த விஷயம்.. கண்ணீர் வர வைக்கும் பாக்கியலட்சுமி புரோமோ..

இருந்தும் விஜயின் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 100 கோடியை தாண்டியது. அதற்கு அடுத்த நாட்களில் வசூல் சிறிது குறைந்தாலும் 500 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூலை குவித்த ஐந்து திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில் முதலிடத்தில் விஜயின் லியோ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ரஜினியின் 2.0 திரைப்படமும், மூன்றாவது இடத்தில் ஜெய்லர், நான்காம் இடத்தில் கபாலி திரைப்படமும், ஐந்தாவது இடத்தில் விஜயின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐந்தில் மூன்று படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 2.0 திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பு செய்து இருக்கிறார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாகும் கோட் படம் இதில் இரண்டு அல்லது மூன்றாம் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story