தமிழ் சினிமா சிகப்பு கம்பளம் விரித்த டாப் 5 ஆசிரியர்கள்... இதில் இவருக்கு இடம் இருக்கா?

by Akhilan |
தமிழ் சினிமா சிகப்பு கம்பளம் விரித்த டாப் 5 ஆசிரியர்கள்... இதில் இவருக்கு இடம் இருக்கா?
X

teachers

தமிழ் சினிமாவில் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் எத்தனை வருடம் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும். அப்படி ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரமாக ஆசிரியர் வேடத்தினை சொல்லலாம். கோலிவுட்டினை கலக்கிய டாப் 5 டீச்சர் ரோல்ஸ் உங்களுக்காக.

சாட்டை:

நமக்கு இப்படி ஒரு டீச்சர் இல்லையே என அனைவருக்கும் ஏங்கிய கதாபாத்திரம் தான் சாட்டை படத்தின் தயா டீச்சர். சமுத்திரகனி நடித்த இந்த கதாபாத்திரத்தினை ரசிக்காமல் யாராலும் இருக்க முடியாது. இந்த படம் வந்த போது பள்ளியிலேயே இந்த படத்தினை போட்டுக்காட்டிய வரலாறெல்லாம் இருக்கு. யாருக்கு தயா சாருக்காக!

kamal

நம்மவர் செல்வம்:

கமல் கல்லூரி பேராசிரியராக நடித்து வெற்றி கண்ட படம் தாம் நம்மவர். செல்வம் என்ற கதாபாத்திரத்தில் 1994ல் மிகப்பெரிய ரீச்சை பெற்ற வேடம் இது. மாணவர்களின் நண்பனா கமல் நடித்தார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றே கூற வேண்டும்.

மாஸ்டர்:

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தில் ஜே.டி என்ற கல்லூரி ஆசிரியராகவும், சிறைச்சாலை வகுப்பு ஆசிரியராகவும் நடித்திருந்தார் விஜய். பொருப்பான ஆசிரியர் என்பதை விட செம கூல் ஆசான கலக்கி இருந்தார் என்றே கூற வேண்டும்.

vijay

ராட்சசி:

கிட்டத்தட்ட அப்பா படத்தின் தயாவை போன்ற ஒரு டீச்சர் வேடம் தான். ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸில் நடித்த படம். கலகலப்பான கேரக்டராக காட்டாமல் ஒரு அமைதியை எப்போதுமே முகத்தில் வைத்திருப்பார் ஜோதிகா. தேவையான இடத்தில் அங்கிருந்தவர்களை ஓடவிட்டு அக்மார்க் கிராமத்து தலைமையாசிரியரை காட்சியாக கொண்டு வந்து இருப்பார்.

நண்பன்:

எத்தனை கதாபாத்திரம் வந்தாலும் நண்பன் படத்தின் விருமாண்டி சந்தானத்திற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. மேலே சொன்ன எல்லா ஆசிரியர்களையும் அவர் மாணவர்களுக்கு பிடிக்கும். ஆனால் விருமாண்டி சந்தானத்தை கண்டால் அனைவரும் தெறித்து ஓடுவார்கள். அவரை வைரஸ் என்றே கூப்பிடவும் செய்வார்கள். சத்யராஜ் நடித்திருந்த இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய ரீச்சை பெற்றது.

Next Story