விடாமுயற்சி படக்குழுவுக்கு கொடுத்த ஷாக்கை ஏற்கனவே தன்னுடைய ஹிட் இயக்குனருக்கும் அஜித் கொடுத்திருக்கிறாராம்?
Ajith:தனியாளாக போராடி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் தான் அஜித். ஆரம்பத்தில் ரொம்பவே இறங்கி போனவர். உச்சத்தில் இருக்கும் போது நிறைய சேட்டைகளை செய்தது உண்மை தானாம். அதை இன்று வரை செய்து வந்து இருக்கிறார் என்பது வேறு கூடுதல் தகவல்.
படக்குழு பல நாள்கள் தவம் இருந்து வரம் இருந்து விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு அக்டோபர் கடைசியில் தான் அஜித் வந்தார். அதில் அவ்வப்போது ரெஸ்ட்டும் எடுத்து கொண்டு இருக்கிறார். இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதி தான் முடிந்து இருக்கிறது. இன்னும் 50 சதவீதம் மிச்சம் இருக்கிறதாம்.
இதையும் படிங்க: மீனாவும், முத்துவும் ரொமான்ஸ் பண்ணுற சீன்லாம் வைக்கிறாங்கப்பா!.. ஒரே குஷி தான் போல!
அதனால் தயாரிப்பு தரப்பு கால்ஷூட் அதிகரிக்க கேட்ட போது கூட நோ நோ. பிப்ரவரியை தாண்டி ஒருநாள் தரமாட்டேன். முடிந்தவரை சீக்கிரம் முடிக்க சொல்லுங்கள் எனக் கறாராக கூறிவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அவரே லேட்டா வந்துட்டு இந்தா வாய் பேசுறாரேனு நினைக்க தொடங்கினர் ரசிகர்கள்.
இந்த கண்டிப்பு புதுசு இல்லையாம். இதற்கு முன்னரே இந்த வேலையை செஞ்சி இருக்காராம். ஒரு கட்டத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் நல்ல ரீச்சை கொடுத்து வசூல் தந்தது. அந்த சமயத்தில் சிட்டிசன் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்ததாம். அந்த படத்தினை இயக்கியவர் சரவண சுப்பையா.
இதையும் படிங்க: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு முதன் முதலில் தீனி போட்ட படம்! வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான
ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை மீறிய அஜித், சீக்கிரம் முடிக்கிறீயா இல்லை நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன். பூவெல்லாம் உன் வாசம் படத்துக்கு கால்ஷூட் கொடுத்துட்டேன். கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்தோ வரேன் அந்தோ வரேனு நானும் எவ்வளோ தான் சமாளிக்கிறது என சத்தம் போட்டாராம். அப்புறம் தான் இயக்குனர் படத்தினை பரபரப்பாக எடுத்து முடித்தார் எனக் கூறப்படுகிறது.