தமிழ் சினிமாவின் மாஸ் காட்சிகள்.. எப்படி எடுத்திருப்பாங்க.. வெளிவந்த ரகசியம்....
தமிழ் சினிமாவில் சில குறிப்பிட்ட காட்சிகளை ரசிகர்களை வெகுவாக கவரும். ஆனால் அது எப்படி படமாக்கினார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கும். அப்படி சில முக்கிய காட்சிகளின் ரகசியம் என்னவென தெரிந்து கொள்வோமா..
அபூர்வ சகோதரர்கள்:
நடிப்பின் நாயகன் கமல். முதன்முறையாக குள்ள மனிதனாக நடித்த படம். இன்றைய காலத்தில் சிஜியில் செய்யும் இது வெகு சாதாரணம் தான். ஆனால் இந்த தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் சிஜியில்ல்லாமல் கமல் எப்படி செய்தார் என்பதே பெரும் ஆச்சரியம். ஆனால் இதற்கு சில யுத்திகள் பயன்படுத்தப்பட்டது. முதலில் நின்றப்படியே எடுக்கும் ஷாட்களுக்கு குழி தோண்டி முட்டிக்கு பிரத்யேகமான ஷூட் போட்டு எடுத்திருந்தனர். தொடர்ந்து, அவர் நடக்கும் காட்சிகளுக்கு நீள குழியை தோண்டி வைத்து எடுத்தனர். ஆனால், வீட்டின் உள்ளே எடுக்கும் காட்சிகளுக்கு கொஞ்சம் சிரமம் இருந்ததாம்.
மற்ற கதாபாத்திரங்களை 18 இன்ச் மேடையில் நிறுத்தி கமலுக்கு குழி தோண்டி நடிக்க வைத்தனராம். அதுமட்டுமல்லாமல், அப்பு கமல் காட்சிக்கு கேமராவும் குழிக்குள் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முட்டி மடக்கி கமல் உட்காரும் காட்சிகளுக்கு கமலுக்கு பிரத்யேகமான காலை சகாதேவன் என்பவர் உருவாக்கி கொடுத்தாராம். அதன் மூலம் கமல் இடுப்பு வரை வைத்துகொண்டு இந்த செயற்கை காலை கொண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் அவரின் சட்டை கழுத்து வரை மூடி இருக்கும். நீள கழுத்து வெளியில் தெரிந்தால் குள்ள மனிதனாக காட்சிப்படுத்த முடியாது.
மான்ஸ்டர்:
சமீபகாலத்தில் வெளியான இப்படத்திற்கு கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லையாம். நிஜ எலியை வைத்தே நடிக்க வைத்தார்களாம். இதற்காக எலியின் வகைகளை குறித்து ஆராய்ந்தனராம். தொடர்ந்து, எலிக்கு சில போட்டோஷூட்களும் நடத்தப்பட்டதாம். அதிலும் எலி வெற்றி பெற்றதாம். இந்த படத்தில் எலிக்கு தனியாக எதுவும் பயிற்சி கொடுக்கவில்லையாம். தனியாக எலியை ஓடவிட்டு பத்து நாட்கள் ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர். காட்சிக்கு தேவையான எக்ஸ்பிரஷனை எலிக்கு கொடுக்கும் வரை எஸ்.ஜே.சூர்யா வெயிட் செய்வாராம். அதன்பிறகே அவர் நடிப்பாராம்.
ராவணன்:
விக்ரம் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் ராவணன். இப்படத்தில் உயரமான பாலத்தில் ஒரு சண்டை காட்சி அமைந்திருக்கும். இதற்கும் கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை. நாலு பாலங்கள் போடப்பட்டு எடுக்கப்பட்டதாம். 2000 அடி பாலத்தில் 210 நீள முதல் பாலத்தில் லாங் ஷாட் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டது. இரண்டாவது பாலம் 70 அடி நீளம். இதில் க்ளோஸப் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டது. மூன்றாவது 30 அடி நீள பாலம். இது இருவரும் ஓடும் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. நான்காவது அந்த பாலத்தின் குட்டி மாதிரியாக உருவாக்கப்பட்டது. இது பாலம் உடைந்து விழும் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
ஆளவந்தான்:
பெரும்பாலும் இரட்டை கதாபாத்திரம் கொண்ட படத்திற்கு முதலில் மாஸ்கிங் யுத்தி தான் பயன்படுத்தப்பட்டது. கேமரா ஒரே இடத்தில் தான் இருக்கும். தொடர்ந்து, கிராபிக்ஸ் வளந்ததும் கிரீன் மேட் போடப்பட்டு எடுக்கப்பட்டது. அதன் மூலம் ஒரே நேரத்தில் இன்னொரு வரை நிற்கவைத்து இரண்டு கதாபாத்திரத்தினையும் எடுத்து விட்டு, தேவையான இடத்தில் முகத்தினை கிராபிக்ஸ் செய்வார்கள். ஆனால் இந்தியாவிலே முதன்முதலில் இரட்டை கதாபாத்திரம் கொண்ட காட்சி நகர்வது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
இதையும் படிங்க: டப்பிங்கிலும் கலக்கும் டாப் 5 கோலிவுட் ஸ்டார்ஸ்… அச்சோ இவர் வாய்ஸ் தான் இதா?
இது மோஷன் கேமராவை கொண்டு எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கேமரா ஆளவந்தான் படத்தில் பயன்படுத்தப்பட்டது. முதலில் விஜய் இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. தொடர்ந்து, 9 மாதங்கள் உடம்பை ஏற்றிக்கொண்டு மொட்டு போட்டு நந்து காட்சிகள் அதே இடத்தில் மீண்டும் படமாக்கப்பட்டது. இரண்டும் பின்னர் இணைக்கப்பட்டதே ஆளவந்தான் சாதனை.