2023ல் இந்திய அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 திரைப்படங்கள்!.. கெத்து காட்டும் ‘ஜெயிலர்’..

Published on: December 31, 2023
movies
---Advertisement---

Top 10 movies: ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் பல திரைப்படங்கள் வெளியாகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் எல்லா படங்களும் வெற்றி அடைவதில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. ஆனால், அதே அளவில் வசூலை பெற்றால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் மண்ணை கவ்வினால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும். இது, கோலிவுட், பாலிவுட் என எல்லோருக்கும் பொருந்தும். அதேபோல், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படம் நல்ல வசூலை பெற்றால் அது தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் திரைத்துறையையும் வாழவைக்கும்.

Love Today
Love Today

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரூ.8 கோடியில்தான் உருவானது. ஆனால், 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரு சினிமாவின் லாபம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு பெரிய நடிகருக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்து, சினிமாவை 50 கோடியில் எடுத்து, மொத்தம் ரூ.150 கோடியில் உருவான அந்த திரைப்படம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை எனில் அதில் என்ன லாபம் இருக்கிறது.

அப்படி 2023ம் வருடம் வெளியாகி அதிக லாபம் பெற்ற திரைப்படங்களை பற்றி காண்போம். இதில் முதலிடத்தில் இருப்பது ஷாருக்கான்தான். அவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் ரூ.1150 கோடியும், பதான் திரைப்படம் ரூ.1050 கோடியும் வசூலை பெற்றது. இப்படி முதல் இரண்டு இடத்தை ஷாருக்கான் படங்கள் பெற்றது.

அடுத்து முறையே அனிமல் திரைப்படம் ரூ.880 கோடியும், கதர் 2 படம் ரூ.690 கோடியும், ஜெயிலர் படம் ரூ.605 கோடியும், லியோ படம் ரூ.593 கோடியும், சலார் திரைப்படம் ரூ.500 கோடியும், டைகர் 3 படம் ரூ.466 கோடியும், பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.410 கோடியும், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படம் ரூ.355 கோடியும் வசூலை பெற்றது.

மொத்தத்தில் டாப் 10-ல் ஏழு திரைப்படங்கள் ஹிந்தி திரைப்படங்களாகும், ஜெயிலரும், லியோவும் தமிழ் படங்கள், சலார் திரைப்படம் மட்டும் கன்னடத்தில் உருவானது. ஆனாலும், இந்த 3 படங்களும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. லியோ படம் மட்டும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்திருந்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை அப்படம் பெற்றிருக்கும் என சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2023- இல் அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகர்கள்!.. அடேங்கப்பா லிஸ்ட்ல இவரு இருக்காரா!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.