சிவாஜி நடித்த படம்.. டைட்டில் கார்டில் பேர் போடுவதில் குழப்பம்.. ஏன்னா உடன் நடித்த நடிகர் அப்படி..
அந்த காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் என இருபெரும் ஆளுமைகளாக இருந்தவர்களின் படங்களின் ரிலீஸ் என்றால் இயக்குனர்களில் இருந்து தயாரிப்பாளர்கள் வரை ஏதோ ஒரு வித பதற்றத்தோடு தான் இருப்பார்கள்.
எங்கேயாவது ஏதோ ஒரு விதத்தில் தவறு நடந்திருமோ என்ற எண்ணத்திலேயே படத்தை ரிலீஸ் செய்வார்கள். அதுவும் பட போஸ்டர்களில் இருந்து டைட்டில் வரை மிகவும் கவனமாக செயல்படுவார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு எம்ஜிஆரும் சிவாஜியும் மாபெரும் சக்திகளாக இருந்து வந்தார்கள்.
இவர்களுக்கிடையில் காதல் மன்னனாக பிரவேசம் எடுத்தார் நடிகர் ஜெமினி கணேசன். சிவாஜி, எம்ஜிஆருக்கு நிகராக தன் படங்களின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். கிட்டத்தட்ட மூவேந்தர்களாக சினிமாவை ஆட்சிச் செய்து கொண்டு வந்தார்கள். கதாநாயகர்களை போல ஹீரோயின்களிலும் அந்த ஒரு பரிணாமம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம்
தான் ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற திரைப்படம். 1962 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் வெளியீட்டில் சிறு பிரச்சினை ஏற்பட்டது.அதாவது ஒரு பக்கம் சிவாஜி, ஒரு பக்கம் ஜெமினி.
ஹீரோயின்களில் சாவித்ரி, சௌகார்,சரோஜா தேவி என முப்பெரும் தேவிகளாக இந்தப் படத்தில் நடிக்க டைட்டில் கார்டில் யார் பெயரை போடுவது என்ற குழப்பம். நடிகர்களில் சிவாஜியின் பெயரை முதலில் போட்டால் அந்த நேரத்தில் ஜெமினியும் சிவாஜிக்கு நிகராக வளர்ந்து விட்டார். ஆகவே ஜெமினியின் ரசிகர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ் நிலையை ஏற்படுத்தும்.
ஜெமியின் பெயரை முதலில் போட்டால் சிவாஜியின் ரசிகர்களுக்கு ஒரு குறையாக தெரியும். மேலும் நடிகைகளிலும் மூன்று பேரும் அதிக புகழை அடைந்திருந்தார்கள். படத்தின் இயக்குனரான பீம்சிங்கும் தயாரிப்பாளரான ஏவி.எம்.மெய்யப்பச்செட்டியாரும் புதுவிதமாக யோசித்தார்கள்.
படம் ஆரம்பிக்கும் போது டைட்டில் கார்டில் ‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்தனர். படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இதையும் படிங்க : திருமண நாளன்று நடந்த துக்கம்!.. மெய்சிலிர்க்க வைத்த சிவாஜி!.. இப்ப யாராச்சும் அப்படி இருக்காங்களா?..