More
Categories: Cinema History Cinema News latest news

இருந்த இடத்தில் இருந்தே உலகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்…வாங்க…இந்தப் படங்களைப் பாருங்க…!

தமிழ்சினிமாவில் பல படங்களைப் பார்க்கும் போது நமக்கு சுற்றுலா சென்ற உணர்வை ஏற்படுத்தும். இப்போதுள்ள படங்களைப் பார்த்தால் பிரம்மாண்டமான பட்ஜெட் என்றும் ஒரு பாடலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று வருவதும் வாடிக்கையாகி விட்டது. அவற்றில் ஒரு சில படங்களைப் பார்க்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன்

Advertising
Advertising

Ulagam sutrum valiban…MGR

1973ல் வெளியான இந்தப்படத்தை எம்ஜிஆர் இயக்கியுள்ளார். இது அவரது சொந்தப்படம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். எம்ஜிஆர், மஞ்சுளா, லதா, சந்திரலேகா, நம்பியார், மனோகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தைப் பார்த்தால் நாம் உலகம் முழுவதும் சுற்றிப்பார்த்த அனுபவத்தை உணரலாம்.

மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் இது. இந்தப்படத்தில் இடம்பெற்ற பத்து பாடல்களும் முத்தானவை. அவள் ஒரு நவரச, பச்சைக்கிளி முத்துச்சரம், லில்லி மலருக்கு, பன்சாயி, தங்கத்தோணியிலே, சிரித்து வாழவேண்டும், உலகம்…உலகம் உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி

1966ல் வெளியான இந்தப்படத்தை திருமலை மகாலிங்கம் இயக்கினார். ரவிச்சந்திரன், கல்பனா, நாகேஷ், வீரப்பன், பக்கோடா காதர், ஏ.கருணாநிதி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் முழுவதும் பஸ்சில் நடக்கும் பயணத்தைக் காட்டுவர்.

பிரமாதமான நகைச்சுவை படம் இது. டி.கே.ராமமூர்த்தியின் இசையில் என்ன எந்தன், எங்கே பயணம், மலர் போன்ற பருவமே, ஹலோ மை ப்ரண்ட் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கோவா

goa movie

2010ல் வெளியான இந்தப்படத்தைப் பார்க்கும் போது நமக்கு கோவா சென்று வந்த அனுபவம் கிடைக்கும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம். வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.

ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், சம்பத் ராஜ், சினேகா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். அடிடா நையாண்டிய, இடை வழி, இது வரை, காதல் என்றால், ஊரு நல்ல ஊரு, வாலிபா வா வா, ஏழேழு தலைமுறைக்கும் ஆகிய பாடல்கள் உள்ளன.

பையா

Paiya…Karthi, Thamanna

இந்தப்படம் முழுவதும் ஒரு கார் பயணம் தான். லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படம். கார்த்தி, தமன்னா, மிலிந்த் சோமன், சோனியா தீப்தி, ஜெகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தைப் பார்க்கும் போது மும்பை டூ பெங்களூர் சென்ற அனுபவம் கிடைக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இன்னிசையில் துளி துளி, பூங்காற்றே பூங்காற்றே, அடடா மழைடா, சுத்துதே, சுத்துதே பூமி, என் காதல் சொல்ல ஆகிய பாடல்கள் உள்ளன.

ஆயிரத்தில் ஒருவன்

Ayirathil oruvan

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ஒரு பீரியட் பிலிம். 2010 பொங்கலுக்கு வெளியாகி தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தைத் தந்தது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை வேறு பரிமாணத்தைக் கொடுத்தது.

கார்த்திக், ரீமாசென், பிரதாப் போத்தன், பார்த்திபன், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். சோழர் கால கதை இது. அக்காலகட்டத்திற்கு சென்று வந்த உணர்வை எழுப்புகிறது. தாச்சினி மண்ணே, ஓ ஏசா, சிங்காரிசனா, மம்மால்னி பாலிஞ்சு, மாலை நின்னு ஆகிய பாடல்கள் உள்ளன.

அன்பே சிவம்

2003ல் வெளியான இந்தப்படத்தில் கமல், மாதவன், கிரண், நாசர், யூகிசேது மற்றும் பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் கமல்ஹாசன். பிரபல விமர்சகரும், கார்டூனிஸ்ட்டுமான மதன் வசனத்தை எழுதியுள்ளார்.

வித்தியாசாகரின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப்படத்தில் கமலும், மாதவனும் பயணம் செய்கின்றனர். இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்கள் பல நிகழ்வுகளைத் தொட்டுச் செல்கிறது. அன்பே சிவம், ஏலே மச்சி, மௌனமே பார்வையாய், பூ வாசம், நாட்டுக்கொரு சேதி ஆகிய பாடல்கள் உள்ளன.

Published by
sankaran v

Recent Posts